மாயலோகம்!!!
செத்தபின்னும் சிரிக்கிறேன்
பிறந்த பொருள் புரியாமல்
வாழும்போது வியக்கிறேன்
யாவும் கானல் என்றறியாமல்
இருப்பவை இறந்தபின் இருந்தவையாதலும்
மடிந்த பின் மனிதன் பினமென்றாதலும்
இயற்கையின் நியதியில் உலகியல் பாடங்கள்
வாழ்கையின் வரையறை வகுத்தவன் எவனும்
இளமையில் வகுத்தாய் கண்டதில்லை எவனும்
புத்தனாய் மாறுதல் எளிதினும் எளிதே
முதுமையில் மடியும் முன் எவனும் இங்கே புத்தனே

தேடல் - பாகம் ஒன்று - அவளது குரல் (கொஞ்சம் பெரிய சிறுகதை)
அவனுக்கென்று பெயர் ஒன்றும் இல்லை அவனை அவன் என்றே
அழைக்கலாம் கரணம் அவன் நம்மை போல சாதாரணன் தான். முப்பது வயதை தொட்டு
விடும் பருவம், ஒல்லியுமற்ற பருமனுமற்ற தேகம், ஒடிந்து போன கண்கள்,
முழுதும் மழிக்கப் படாத மீசையும் தாடியும் அவனை ஒரு சாதாரண மனிதனாகவே
காட்டியது. திருவல்லிகேணியில் புத்துபோல பெருகி இருக்கும் மேன்ஷன்களில்
அணைத்து மேன்ஷன்களிலும் இவனை போல பலர் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவன்
தான் இவன். காலை எழுந்து இரவு உறங்கும் வரை தனிமையின் வெறுமை கழிய
புகைத்துக்கொண்டே இருப்பான், இதனால் அவனது அரை எங்கும் புகை வெள்ளோட்டம்
போட்ட படியே இருக்கும் இவனது சட்டை முதல் அந்த அறையின் அணைத்து
பொருள்களிலும் சிகரட்டின் மனம் படிந்தே இருந்தது. புகை பிடிக்கும்
வேளைகளில் அவனுக்கு ஒரு வினோத பழக்கம் இருந்தது, அது அவன் சிகரெட்டை பற்ற
வைத்த பின்பும் சிகரெட் லைட்டரை எரிய விட்டு அணைத்து மீண்டும் எரிய விட்டு
அதில் வரும் நெருப்பை உற்று நோக்கிய படி இருப்பான். ஒவ்வொரு முறை
நெருப்பு எரிய துவங்கும்பொழுதும் அவனுக்குள் ஏதோ வெளிச்சத்தை பிறப்பித்தது
பின் அதை அணைத்து விடும் பொழுது அவனுக்கு ஏதோ ஒரு தேடலை முடித்த நிறைவு
கிடைத்தது . மீண்டும் அதை பற்ற வைக்கும் பொழுது அவனுக்கு நெருப்பு ஒரு
வினோத பொருளாக தெரிந்தது, ஒவொரு முறையும் நெருப்பு ஏதோ புது உருவம் எடுத்து
நடனம் ஆடுவது போல் அவன் உள்மனது உணர்ந்தது. கண்களை சிமிட்டி, புருவத்தை
உயர்த்தி, நெற்றியை சுருக்கி அவன் நெருப்பின் அழகியலை ரசித்து ரசித்து
சிகரட்டை புகைப்பான். அவனது அதிக பட்ச நேரம் செலவிட படுவது இப்படி
புகைப்பதில் தான், இன்னும் சொல்ல போனால் சிதறிக்கிடக்கும் சிகரெட்
பெட்டிகளும் அதனுள் சுருண்டு கிடக்கும் சிகரெட் துண்டுகளும் தான் அவனது
அறையை ஆக்ரமித்து இருந்தது அதை தவிர அந்த அறையின் மூலையில் ஆணியில்
தொங்கும் அவனது அழுக்கு துணிகளும், அந்த அறையின் என்றுமே மூடப் படாத
அளமரையினுள் இருக்கும் அவனது கை கடிகாரமும் சில பழைய வார இதழ்களும் தான்
இருந்தது. இப்படி ஒரு சாதாரணனின் வாழ்க்கை முறையும் மிகச்சாதரனமாகவே
இருந்தது.
அவனது மேன்ஷனுக்கு கீழே இருக்கும் பெட்டிக் கடையில் சிகரெட் மற்றும் லைட்டர் வாங்குவதும், அவனது ஹீரோ ஹோண்டா வண்டியில் அலுவலகம் செல்வதும், மீண்டும் அறைக்குள் அடங்குவதும் தான் அவனது வாழ்க்கை, கோயில்களுக்கு அவன் அதிகம் செல்வது இல்லை அனால் கடவுள் பக்தியற்றவன் இல்லை என்பதற்கு அடையாளமாக தினமும் அவன் செல்லும் வழியில் இருக்கும் சிறிய கோயில் பிள்ளையார் மடத்தை வணங்கி விட்டே செல்வது அவன் வழக்கம். பெரும்பாலும் அவன் பெண்களை கவனிப்பது இல்லை ஆனால் மாடர்ன் உடையில் அலையும் பெண்களை இச்சையோடே பார்த்தாலும் ஏதோ புழுவை பார்ப்பது போல வெறுப்பாக பார்ப்பான் அதைத்தவிர அவன் பார்க்கும் மற்ற இரண்டு பெண்களில் ஒருத்தி அவன் சிகரெட் வாங்கும் பெட்டிக்கடியில் தினமும் காலை இவன் வாங்கும் அதே நேரத்தில் சிகரெட் வாங்கும் பெண், நல்ல குடும்பப் பாங்காக உடை உடுத்தி இருக்கும் அந்த பெண் சிகரெட் வாங்குவது அவனுக்கு வியப்பாக இருக்கும் அவளை வெறித்து பார்த்து விட்டு நகர்ந்து விடுவான் இன்னொரு பெண் இவன் தினமும் பார்க்கும் அந்த சிறிய பிள்ளையார் மடத்தின் முன் நின்று அழுது கொண்டே இருக்கும் பெண், அவளும் குடும்பப் பாங்காக இருக்கும் ஒரு ஏழை பெண் என்பது அவளது உடையிலும் அவளுது அழுது வடிந்த முகத்திலும் தெரியும், அவளையும் வெறித்து பார்த்து விட்டு ஏதும் சிந்தனை இன்றி பொய் விடுவது அவனது பழக்கம், இவர்களை தவிர இவன் தினமும் சந்திக்கும் இன்னொரு மனிதனும் இருந்தான் அவன் இவனது மேன்ஷனின் வாசலில் படுத்துக் கிடக்கும் ஒரு மனநலம் குன்றிய மனிதன், அந்த மனிதன் அவன் மீது ஆறு ஏழு சட்டையும், பத்து கால் உறையும் அணிந்துகொண்டு இருந்தான் அவனது பாதங்கள் கூட தெரியாத அளவிற்கு துணிக்குள் தன்னை புகுத்திக் கொண்டு இருப்பான்.
இவர்களை பார்த்தும் இவர்கள் எதோ வினோதமாணவர்கள் என்பதை உணர்ந்திருந்தும் அவன் அவர்களை அதிகம் சட்டை செய்து கொள்வதில்லை வெறும் ஒரு வெரிச்ச பார்வை வீசி செல்வதிலும் இவன் நம்மைப்போல சதரனனாகவே இருந்தான்.
அவனது அன்றாட நாட்கள் இப்படி நகர்ந்து கொண்டிருந்த வேலை ஒரு நாள் அவனது வேலை பறிபோனது, அமெரிக்காவில் ஏதோ பொருளாதார கோளாறாம் அதன் காரணமாக அவரகளது அலுவகத்தில் அல்குரைப்பம் அமெர்கிய பொருளாதாரம் நமது திருவல்லிக்கேணி சாதாரணனின் வேலையையும் பறிக்க அவன் வெறுப்போடு அவனது அறைக்கு திரும்பினான், எதிர்பாராத ஏமாற்றம் அவனுக்கு ஏதோ எண்ணங்களை கொடுத்தது, எதை சிந்திப்பது எதை விடுப்பது என தெரியாமல் தலை சுற்ற துவங்கியது கையில் காசு தீரும் முன் இனொரு வேலை வேடும் என தொடர பயம் பற்றிக்கொண்டது அது முதல் அவன் வெளியில் செல்ல பயந்து அறைக்குலையே அடங்கிப் போனான், பல அலுவகங்களுக்கு வேளைக்கு மனு போட்டும் தற்போது நிலவும் சுழலால் இபோதைக்கு வேலை இல்லை என்கிற ஒரே பதிலை கேடு சலித்துப் போனான் இந்த மாற்றங்களுக்கு நடுவிலும் மாறாமல் இருந்த ஒரு நிகழ்வு அவனது புகதலும் அவன் காணும் அந்த அமூன்று நபர்களும் தான், இப்போதெல்லாம் அவர்களை கண்டு அவன் நகர்வதில்லை ஏதோ சிந்திபவனை போல அவர்களை பார்த்ததும் நின்றுவ்டுறான் ஆனால் உண்மையில் அவனது எண்ணங்கள் வெறுமையை இருக்கின்றன ஏதும் சிந்திக்க அவக்கு தோன்ற வில்லை, அவனை நெருங்கிக்கொண்டிருக்கும் அவனது வெறுமையை கண்டு அவன் மிகவும் பயந்து அறைக்குள் அடங்கின ஒரு நாள் ஒரு சிகரெட்டை எடுத்து நெருப்பேற்றியவன் அவனது லைட்டரை எடுக்க மறந்து ஏதோ சிந்தனையில் மூழ்கிப் போனான் அவனது சிந்தனையில் அவன் தினமும் பார்க்கும் அந்த சிகரெட் வாங்கும் இளம் பெண் தோன்றி தான் சிகரெட் வந்குவதின் காரணத்தை இவனுக்கு கூறுவது போல இருந்தது அவளது குரல் மேலோங்கி ஒலித்தது இந்த உலகத்தில் உள்ள எல்லா அண்களும் பெரும்பாலும் புகைக்கிறார்கள், ஆண்களே மதுக்கடைகளில் நிற்கிறார்கள், கூட்டமான பேருந்துகளில் பெண்கள் மீது உரசி இன்பம் கொள்கிறார்கள் அணைத்து ஆண்களும் பெண்களை அடக்க நினைக்கிறார்கள் ஆணாதிக்க உலகில் ஆண்கள் செய்யும் ஏதேனும் ஒரு தனிச்செயலை நானும் செய்ய நினைதேன் அதான் சிகரெட்டை வாங்குகிறேன் அதில் எனக்கு ஒரு அறப்ப சந்தோஷம் என்று கூறும் அவள் திடீரென்று அழ துவங்கினால் அழுதவள் கண்களை துடைத்து விட்டு ஒரு குரூர சிரிப்போடு நான் எந்த சிகரெட்டையும் புகைக்க வில்லை நான் வெறும் நுகர்ந்து பார்கிறேன் அதில் ஆண் வர்க்கம் பெண்கள் மீது ஊதிய புகையின் நாற்றத்தை உணர்கிறேன் நானும் அங்கள் மீது இந்த நாற்றத்தை ஓத நினைக்க வில்லை ஆனால் பெண்கள் மீது ஆண்களில் அடக்க சக்தியை நான் மறக்காமல் இருக்க இப்படி செய்கிறேன் செய்து கொண்டே இருபேன் ஆண்களை நன் வெறுக்கிறேன் அவரகளது பிடியில் என் பெண்களும் அழுவதை பார்த்து அழுகிறேன் ஆண்களை போல சிகரெட் வாங்குவதால் ஆண்களை அடக்கி விட்ட ஆனந்தத்தில் சிரிக்கிறேன் என மீதும் மீண்டுமாக சிரித்தாள் அவன் தன நினைவு தெளிந்தவனாக எழுந்த பொது சிகரெட் அவன் கையை சுட்டது கீழே விழுந்த சிகரெட் துண்டை பார்த்தவன் தனக்கு தானே பேசிக்கொள்ள துவங்கினான்.
இவன் சிந்தனை தொடரும்...(அடுத்த பதிவில் தேடல் - பாகம் இரண்டு - வெறுமை)

முகவுரை
மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சிக்கொள்கிரேன்
நாம் பிறக்கும் முன்னமே நமக்கான வாழ்கை வடிவமைக்க படுகின்றது, நமது சுற்றங்கள் இயங்கிக்கொன்றுக்கின்றது, நமது தேடல்ல்கள் நாம் பிறக்கும் முன்னமே துவங்கி விடுகின்றது, நமது ஆன்மீகமும் நமது உலகுமும் நமக்கு முனமே உருவாக்க பட்டவை எனவே வாழ்க்கைக்கு ஆரம்பம் என்பது உலகின் ஆரம்பம் போல ஒரு காண கிடைக்காத தேடல் தான், அதே போல இறப்போடு எந்த மனிதனின் வழக்கையும் முடிந்து போவஹ்டு இல்லை கரணம் நமது வாழ்க்கையும் அது உருவாக்கும் அதிர்வும் உலகம் இருக்கும் வரை எங்கோ ஒரு புள்ளியில் இருந்து கொண்டே இருக்கின்றது எனவே எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையும் பிறப்பில் ஆரம்பிப்பதில்லை அது இறப்பில் முடிவதில்லை. இந்த கருத்து என்னுள் ஆழமாக விதைத்து போனதால் நான் எழுதவிருக்கும் சிறுகதைகளுக்கும் முடிவு என்பது இருக்க போவது இல்லை அது தன போக்கில் ஒரு முற்று இன்றி இயங்கிக்கொண்டே இருக்க போகின்றது. ஆம் நண்பர்களே இனி எனது பதிவதில் நான் சிறுகதைகள் எழுதப் போகிறேன் இது எனது சிறுகதைகளின் முகவுரை.
வாழ்க்கையின் பதிவாக இருக்க வேண்டும் என்பதனால் சதரனின் வாழ்க்கையை என் எழுத்தில் கொண்டு வர முயற்சிக்க போகிறேன், என் சிறுகதைகளும் மனித வாழ்க்கையை போல சுபம் போட்டு முற்று பெறாமல் ஒரு சில கேள்விகளோடும் வெளிவிகலோடும் நிலலடிக்கொண்டு இயங்கும். கதைகளில் நீங்கள் வாழ்வீர்கள் என்பது எனது அளிக்க முடியாத கருத்து.
மனித வாழ்க்கை ஒரு வெற்றிடம் இத நிரப்பிக்கொள்ள நாம் உறவுகளை ஏற்படுத்திகொல்கிரூம் இந்த உறவுகள் எதை தருகின்றன? இந்த உறவுகள் அற்ற தனிமை எதை தருகின்றது?? இந்த சமூகம் நமக்கு என்ன சொல்கின்றது?? நாம் ஏன் இங்கே வாழ்கிறோம் என்ற தேடல்கள் நிறைந்த வாழ்க்கையாக நமது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு வெற்றிடங்களை நிரப்ப முயற்சிக்கின்றோம் இப்படித்தான் என் கதையின் கதப்பதிரங்களும் செயல்பட போகிறார்கள். உங்களோடு உறவாட போகும் என் கதப்பத்திரன்களுக்கு பெரும்பாலும் பெயர்கள் வைக்க போவது இல்லை காரணம் பெயர்கள் ரதனிமனிதனை சுட்டிக் காண்பிக்கவே உபயோகிக்க படுகின்றன இங்கே எனது கதைகளில் வருபவர்கள் தனி மனிதர்கள் இல்லை மாறாக நமது நிஜங்களின் நிழல்கள் எனவே இவர்கள் ஒரு ஒரு மனிதனின் உருவங்கள் உங்கள் பெயர்களை சேர்த்து படிதுக்கொளுங்கள்.
என் பதிவேடுகளின் பக்கங்கள் பெரும்பாலும் புரட்ட படுவது இல்லை என்றாவது ஒரு நாள் யாரேனும் புரடிப்பர்த்தால் நிச்சயம் உங்களை இந்த கதைகளில் கண்டுகொண்டால் நானும் இந்த பதிவேடும் என் கதைகளும் பயன் பெற்றதாக ஆகும்
நன்றி
உங்களில் ஒருவன்
அ. ஜோசப் கேமிலஸ்

மனிதன் என்கிற மிருகம் பாகம் 4 - மரத்துக்கு மரம்
மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சிகொள்கிறேன்
"நேற்று நாம் ஆசை கொண்ட பொருள் இன்று நமக்கு பிடிப்பதில்லை, இன்று நமக்கு பிடிக்கும் பொருளும் நாளை பிடித்து இருக்கும் என்ற உத்திரவாதம் இல்லை" இந்த அடிப்படைதான் மனித மனம் மிருகத்தின் மனதோடு நெருங்கி இருக்கச் செய்கின்றது.
உணவு துவங்கி உறைவிடம் வரை நமது ஆசை என்றுமே அடங்கி இருப்பது இல்லை, நடைபாதையில் படுப்பவருக்கு கூரை வீட்டின் மீது ஆசை, கூரை வீடு கிடைத்த பின் அவருக்கு மச்சி வீடு மீது ஆசை, அதுவும் கிடைத்தபின் அவருக்கு தனி பங்களாவின் மீது ஆசை இந்த ஆசையின் விளைவு நல்ல உழைப்பாக இருக்கும் வரையில் அந்த ஆசை மனிதனின் கட்டுபாட்டுக்குள் இருக்கிறது அனால் அதே ஆசை மனிதனை தன கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து விட்டால் அது அவரை தடம் மாறச்செய்கிறது. மனிதனின் அன்றாடத் தேவைக்கான அளப்பெரும் ஆசை தவறு இல்லை, ஆனால் அந்த ஆசையை அடைவதற்கு செல்லும் பாதையே மனிதனை மனிதனாகவும் மிருகமாகவும் வேறுபடுத்துகின்றது.
கணினிகாலத்து மனிதன் மிகவும் பன்படுத்தப்படவன் எனிற பிம்பத்தில் வாழ்கிறான் ஆனால் உண்மையில் இன்றைய மனிதன் போல அரைகுறை மனிதன் என்றுமே இருந்ததில்லை. ஒருகாலத்தில் ஒரு படைப்பு உருவாக பல ஆண்டுகள் அராய்ச்சி தேவை பட்டது, அந்த படிப்பு கடை நிலை உபயோகஸ்தனிடம் வந்து சேர இன்னும் பல ஆண்டுகள் தேவைப்பட்டது ஆனால் இன்றைய நிலைமை வேறு ஒரு படைப்பு உருவாக வெகு சில காலமே எடுக்கிறது அது நல்லதா தீயதா என அறியும் முன் அந்த படைப்பின் விநியோகம் துவங்க பட்டு கடை நிலை மனிதனிடமும் வந்து சேருகின்றது. சாதாரண மக்கள் அந்த படைப்பாய் பயன்படுத்தி குறைகளை தெரிந்ததும் அதன் மறு உருவம் உடனுக்குடன் வெளிவருகிறது அதுவும் உடனுக்குடன் மக்களை வந்து சேருகின்றது...நண்பர்களே இப்படி என்ஹா ஒரு படைப்பும் மக்களை உடனுக்குடன் சேருவது மிக்க நலமே ஆனால் அந்த படைப்பு சமூகத்தின் மீதும் தனி மனிதன் மீதும் செலுத்தும் ஆதிக்கம் பெருகிவிட்டது என்பதை நாம் இங்கே கவனிக்க மறந்து போகிறோம். நமக்காக படைக்க பட்ட இயந்திரங்களுக்குள் நாம் இன்று சிக்கிக்கொண்டோம் என்பது மிக முக்கியமான ஒரு விஷயம். எனக்கு டேஹ்றிந்த ஒரு நண்பர் மாதம் ஒரு கைப்பேசியை மாற்றுவார் "updating" என்ற ஆங்கில சொல் இதற்க்கு மிக இலகுவாக பயன்படுத்த படுகின்றது. ஆனால் உண்மையில் இந்த வேகம் சிறிது நிறுத்தப்பட வேண்டும் மனிதனின் வளர்ச்சி அவனை மேலே உயர்த்த வேண்டுமே தவிர உயர்த்தி பின் அதல பாதாளத்தில் தள்ளிவிடக் கூடாது. மரத்திற்கு மரம் நிமிடங்களில் தாவும் குரங்கல்ல நாம் நிதானித்து பின்விளைவுகளை யோசித்தும், நமக்கு பின்னும் இந்த உலகம் நீடூடி வள வேண்டும் என்கிற அதீத எண்ணம் கொண்டும், படைப்புக்கள் யாவும் பணமா செய்ய அல்ல மாறாக சமொகத்திக்கு உபயோகப்பட என்னும் எண்ணம் வளரவும் சிந்திப்போம்...மரம் விட்டு மரம் தாவும் முன் சிந்திப்போம் நிலையான மனம் கொள்ளுவூம் மனிதனாவோம்
மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்களிலொருவன் அ. ஜோசப் கேமிலஸ்
இயற்க்கைக்கு எல்லைகள் இல்லை...
இந்தியக்காற்று இங்கிலாந்தில் வீச யாரை கேட்கிறது அனுமதி
கால்கள் கொண்டேன் எல்லைகளும் கொண்டேன்...
பசபிக் பெருங்கடலின் துளி இந்தியப்பெருங்கடலில் கலக்க கேட்பதில்லை அனுமதி
அரறறிவு கொண்டேன் என் உரிமைகள் இழக்க...
தமிழ்ப் புறாவும் மராத்திப் புறாவும் பேசிக்கொள மொழிபெதம் இல்லை
கல்வியும் கொண்டேன் சுருங்கிய அறிவோடே...
அர்டிக்கின் டால்பின் அட்லாண்டிக்கில் ஆட பாஸ்போர்ட் தேவை இல்லை
மனிதனானே எல்லைக்குள் அடங்கிப் போனேன்...
இயற்க்கை என்றும பேதம் கொண்டதில்லை அவை எந்த எல்லைக்குள்ளும் அடங்கியது இல்லை, மனிதர்கள் நாமும் இயற்கையின் அங்கம் தான் அனால் சிந்தித்து பாருங்கள் நண்பர்களை மேற்கூறிய எந்த ஒரு கருத்திலாவது மனிதன் என்பவன் இயற்கையின் மற்ற அங்கங்களை போல சுதந்திரத்தை அனுபவிக்காதவன். உண்மையில் மனிதனுக்கு இயற்கையை அடக்கி ஆளத்தான் ஆசையே தவிர இயற்கையை அனுபவித்து வாழ ஆசைப்படுபவன் இல்லை.
இயற்கையாய் வாழ எல்லைகளை தகர்ப்போம்...அன்பு கொள்வோம் அதுவே இயற்கையின் வலி...எல்லைகள் மறந்தால் தொல்லைகள் இல்லை...

மிச்சம்...
பசித்த பின் உண்பவனுக்கு பஞ்சம் மட்டும் மிச்சம் - இங்கே
பணமிகு மனிதர்க்கு நோய் நொடியே மிச்சம்
உழுதவனுக்கு ஏர் மிச்சம்
நெய்தவனுக்கோ தறி மிச்சம்
கொடுதவனுக்கோ தேய்ந்த செருப்பு மிச்சம்
வாங்கியவனுக்கு கடன்கார பட்டம் மிச்சம்
செத்தவனுக்கு உடல் மிச்சம்
நடப்பவனுக்கு நாளைய நாள் மிச்சம்
காத்திருத்தல் காதலனுக்கு மிச்சம்
காத்திருந்தால் காதல் என்றுமே மிச்சம்
கல்யாணம் ஏழை பெண்ணுக்கு மிச்சம்
குழந்தையோ மலடிக்கு மிச்சம்
முதுமையில் தனிமை மிச்சம்
இளமையில் கல்வியே மிச்சம்
முத்தங்கள் காதலின் மிச்சம்
சப்தங்கள் மௌனத்தின் மிச்சம்
உலகமே கதிரவன் மிச்சம்
படைத்தவன் தூவிய எச்சம்
பணமிகு மனிதர்க்கு நோய் நொடியே மிச்சம்
உழுதவனுக்கு ஏர் மிச்சம்
நெய்தவனுக்கோ தறி மிச்சம்
கொடுதவனுக்கோ தேய்ந்த செருப்பு மிச்சம்
வாங்கியவனுக்கு கடன்கார பட்டம் மிச்சம்
செத்தவனுக்கு உடல் மிச்சம்
நடப்பவனுக்கு நாளைய நாள் மிச்சம்
காத்திருத்தல் காதலனுக்கு மிச்சம்
காத்திருந்தால் காதல் என்றுமே மிச்சம்
கல்யாணம் ஏழை பெண்ணுக்கு மிச்சம்
குழந்தையோ மலடிக்கு மிச்சம்
முதுமையில் தனிமை மிச்சம்
இளமையில் கல்வியே மிச்சம்
முத்தங்கள் காதலின் மிச்சம்
சப்தங்கள் மௌனத்தின் மிச்சம்
உலகமே கதிரவன் மிச்சம்
படைத்தவன் தூவிய எச்சம்
மனிதன் என்கிற மிருகம் - பாகம் 3 - வால்

மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சிக்கொள்கிரேன்!!!
மனிதன் என்கிற மிருகத்தை தவிர மற்ற எல்லா மிருகங்களுக்கும் பெரும்பாலும் வால் இருக்கிறது. நன்றியை தெரிவிக்க நாய் தன் வாலை ஆட்டுவதும், ஈக்களை விரட்ட மாடுகள் தன் வாலை அசைப்பதும் தவிர வாலுகென்று ஒரு முக்கிய பனி எதுவும் இல்லை, பின் எதற்காக இந்த உபயோகமட்ட்ற ஒரு உறுப்பை இந்த மிருகங்கள் தாங்கி இருக்கின்றன என்ன யோசிக்கவெய்த்து என்னை பல நேரங்களில் வால் தொந்தரவு செய்திருக்கின்றது. பல வேளைகளில் நாய்கள் தன் வலை அசைத்து என்னை பரிகசிப்பது போல தோன்றுவதும் உண்டு.
உங்களில் பலர் என்னை போலவே பல வேளைகளில் வில் போல வளைந்த நாயின் வாலை நேர் செய்ய முயற்சித்து இருப்பீர்கள் இன்னும் பலர் மலை அளவு முயன்றும் நிமிர்த்த முடியாது அந்த நாய் வாலை கையால் நசுக்கி நாய் கடி வங்கி இருப்பீர்கள் அந்த அளவுக்கு இந்த நாயின் வால் நம்மை பல வேளைகளில் பாதித்து இருக்கிறது. ஒரு வகை உயர் ஜாதி (மனிதன் வகை படுத்தியதால் நாய்களிலும் கூட ஜாதிகள் பிரித்து விட்டோம்) நாய்களுக்கு வால் வெட்டபட்டால் தான் அதன் மதிப்பு கூடுமாம் என நான் கொடுத்த அறிவுரையை ஏற்று அந்த வகை நாய் ஒன்றை வால் வெட்டுவதற்காக என் நண்பர் தன் நாயை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். தன் வால் வெட்டுப்பட போவதை அறியாத அந்த பரிதாப ஜீவன் தன் வாலை அசைத்தபடியே மருத்துவமனைக்கு சென்றது. மருத்துவர் அந்த வாலை வெட்டி எடுத்த பிறகு நான்கு ஐந்து நாட்கள் அந்த நாய் வெறி பிடித்தது போல சுற்றி வந்தது, மேலும் அது தன் வால் தானாக மறைத்து கொள்கிறதோ என்று எண்ணி தன் பட்டத்தை திருப்பி திருப்பி பார்த்தது எனக்கு பரிதாபமாக தோன்றியது. சில களம் இப்படி தேடி பார்த்து கிடைக்காமல் போனதால் அது தன் வாலை மெல்ல மெல்ல மறந்து போனது, எப்பொழுதாவது பொழுதுய்கள் வால் அசைப்பதை கண்டுவிட்டால் அது வால் இல்லாத தான் பின்புறத்தை மட்டும் ஆடிக்கொள்வது உண்டு. இதை பார்த்த பொழுது அந்த நாயின் மீது எனக்கு ஒரு பரிதாப உணர்ச்சி தோன்றியது ஈதோ அந்த நாயின் இயல்புத்தன்மையை வெட்டி எடுத்துவிட்டது போன்ற குற்றுனர்சியும் எனக்கு உண்டானது. மறுமுறை இந்த உணர்வோடு அந்த நாயை பார்த்தபொழுது நாயின் புட்டத்தில் வெட்டி எறிந்த வால் ஆடுவதைப்போன்ற பிரமையும் தோன்றியது. பல வேளைகளில் மைதனுக்கும் ஒரு காலத்தில் வால் இருந்து அது ஏதோ ஒரு காரணத்தால் வெட்டப்பட்டு இருக்குமோ என கூட தோன்றியது உண்டு. நம் பின் புறத்தில் முதுகுத்தண்டின் இறுதியில் வால் வெட்ட பட்டது போன்ற ஒரு அமைப்பு இருப்பது போன்றும் எனக்கு தோன்றி இருக்கிறது இதன் காரணமாக நானும் கண்ணாடியில் வால் இருந்த தடம் தெரிகிறதா ன்ன பார்த்தது உண்டு.
இந்த வெட்ட பட்ட வாலை போலதான் நாம் பல வேளைகளில் நமக்கு தேவை அற்றது என எண்ணி நமது பல இயல்புகளை பல வேளைகளில் வெட்டி எரிந்து விடுகின்றோம். மற்றவர்கள் நம்மை தவறாக நினைப்பார்கள் என்றும், ஊருக்கு நல்லவன் நான் என்றும் சொல்லிக்கொள்ள பல வேளைகளில் நாம் நமது இயல்பை வெட்டி எரிந்து விடுகின்றோம் உண்மையில் நமது வால் நமக்கு பொருத்தமானதுதான். நமது வாலை நாம் காப்பாற்றிக்கொண்டால் நை வாலை பாத்து பொறாமைப்பட தேவை இல்லை.
மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்களில் ஒருவன் அ. ஜோசப் கேமிலஸ்
மனிதன் என்கிற மிருகம் - பாகம் 2 - பூனை போல் மனிதன்
மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்வது உங்களில் ஒருவன் அ. ஜோசப் கேமிலஸ்

ஒரு ஒரு மனித மனமும் ஒரு பெரும் புதையல், இந்த புதையலை அகழ்வாராய்ந்து பார்க்க என்னோடு இந்த பயணத்தில் பயணிக்க உங்களை வரவேற்க்கிறேன், உங்களது மனதை நீங்களே அகழ்வாராய்ந்து உங்களது மனதின் புதையலை புரட்டிப்பார்க்க வாருங்கள் வாழ்க்கையில் பயணிப்போம். புதையல் என்பது பொதுவாக கண்களில் தென்படாது எங்கையோ மறைக்கப்பட்டிருக்கும் அதை போலத்தான் மனித மனமும் மறைக்கப்பட்டே இருக்கின்றது. பெருவாரியான நாட்களில் நாம் மற்ற மனிதர்களை மதிப்பீடு செய்யும் பொழுது நாம மறந்து விடும் ஒரு செயலைத்தான் இங்கு அலச இருக்கின்றோம்.
கண்முன்னே தெரியும் ஒரு பிம்பம் என்றும் கானல் என்பதை நாம் பல வேளைகளில் மறந்து விடுகின்றோம். காட்சிப் பிழைகளை கொண்டு மற்ற மனிதர்களை மதிப்பீடு செய்யும் பொழுது அது நம் மனதிற்கு தோன்றும் கானல் என்பதை மறந்து போகின்றோம். "தன் விழிகளை மூடிய பூனை உலகம் இருண்டது என்றதாம்" இதை போலத்தான் இன்று நாமும் இருக்கிறோம், அதாவது நம் பார்வைக்கு எது தெரிகின்றதோ அதை மட்டுமே அலசும் சதர்ணனாக நாம் செயல் படுகின்றோம். நம் முன்னே நிற்கும் ஒரு மனிதன் நமக்கு அவனது மனதின் முழுமையை காண்பிக்கும் முன்னமே அவனை மதிப்பீடு செய்ய நாம் முயல்கிறோம், இது முற்றும் தவறான ஒரு செயல். நமக்கு முன்னே நிற்கும் மைதான் பெரும் பாலும் அவனது நிஜத்தை மறைத்து நம்மை கவரும் செயலில் தான் முதன்மை செலுத்துகிறான் இதை மறந்து அவன் நல்லவன் எனும் முடிவுக்கு நாம் முந்துகிறோம்... பல வேளைகளில் தன சூல்நிளைகரனமாக சிலர் கோவம் கொள்ளும் வேலையில் அவனை தீயவன் என நாம் மதிபிடுகின்றோம் இதுவும் சேரி முன்னது போல நல்லவன் என மதிப்பிடுவதும் தவரே....
ஒரு மனிதன் தன முழுமையை காண்பிக்கும் முன்பு அவனை மதிப்பீடு செய்தல் என்பது பூனையின் செயலுக்கு ஒத்ததே...நமது செயல் நமக்கு என்றுமே தவறானதாக தோன்ற வேண்டும், அந்த தவறை அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் பின்னரே நாம் மற்றவரை மதிப்பீடு செய்தல் வேண்டும். "Judging a man is just judging what he has chosen to show you " மனிதர்களை மதிப்பீடு செய்ய அவசியம் இல்லாத உலகம் இது எனவே யாரையும் அறிந்து கொள்ள எத்தனிக்கும்முன் நம்மை நாம் அறிந்து கொண்டால் நிச்சயம் நாம் மற்றவரை மதிப்பீடு செய்ய முயற்சிக்க வேடியது இருக்காது.

மனிதன் என்கிற மிருகம் - பாகம் 1
முகவுரை
"அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்" - இன்றைய உலகம் சுவைத்து வரும் அபிரிமிதமான வளர்ச்சியும் கூட ஒரு விதத்தில் நஞ்சாகக்கூடிய அமிர்தம் தான்.

உலகம் தோன்றியது முதல் இந்த நிமிடம் வரை பல தாவர வகைகள் இருந்து மறைந்து போனது, பல மிருக வகைகள் இருந்த இடம் தெரியாமல் மாயமாகின இப்படி அழிந்து போன உயிரனங்கள் மனிதனைக் காட்டிலும் பலம் வாய்ந்தவை மனிதனைக் காட்டிலும் மிகபெரியவை ஆனால் அறிவு என்ற ஒரு புள்ளியில் மனிதன் இந்த மிருகங்களைக் காட்டிலும் உயர்நதவனாய் இருந்தான். அந்த அறிவு என்ற புள்ளி தான் இன்று வரை மனித இனம் அளியஹ்டு காது வந்திருக்கிறது. எந்த அறிவு மனிதனை இன்று வரை காத்து வந்ததோ அதே அறிவு இன்று மனிதனுக்கு ஆபத்தாக மாறிவருகிறது என்பதை உணர்த்துவது தான் இந்தக் கட்டுரையின் நோக்கம். இந்த "மனித என்கிற மிருகம்" கட்டுரையை ஒரே பதிவில் சுருக்கி விட முடியாததன் விளைவாக, சில பாகங்களாக இதை ஒரு தொடர் கட்டுரையாக எழுதுகிறேன்.
நெருப்பு, சக்கரம், உழவு, மொழி... இவற்றை மனிதன் கண்டுபிடிக்கும் முன் அவனும் ஒரு சாதாரண மிருகமாகத் தான் இருந்திருப்பான். உண்மையில் அந்த காலத்தில் மனிதனை மிருகங்கள் ஆண்டு கொண்டிருந்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு. விபத்தாக தான் கண்டு பிடித்த நெருப்பைக்கண்டு முதலில் மனிதனே அஞ்சி இருப்பான் பின் அவற்றைக் கொண்டு மிருகங்களிடம் இருந்து தன்னை காப்பற்றிக்கொண்டான், இருளில் வெளிச்சத்தை உண்டாக்கும் சூரியனாக நெருப்பை நினைத்தான், பிறகு மெல்ல மெல்ல நெருப்போடு நட்பாகி குளிர் காய்ந்தான், நெருப்பைக் கொண்டு மிருகச்சதை சமைக்க கற்றுக்கொண்டான். இப்படிதான் சக்கரத்தின் கண்டுபிடிப்பும் நிகழந்து மெல்ல மெல்ல அது தன் உருவம் பெற்றது, உழவும் மொழியும் இங்ஙனமே மனிதனுள் வளர பல கால ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. இப்படி மெல்ல மெல்ல நிகழ்ந்த மனித அறிவின் வளரசியல் மனிதன் நாகரிக வாழ்க்கைக்குள் நுழைந்தான் உலகத்து உயிரினங்களில் உயர்ந்தவனாக மாறினான்.
உணவு, புணர்ச்சி இவற்றை தவிர வேறு எதற்கும் எந்த மிருகமும் ஆசை பட்டதில்லை...மனிதன் உலகத்தில் தோன்றிய பல லட்சம் ஆண்டுகள் கடந்து தன் அறிவை அவன் உணர துவங்கும் வரை மனிதனும் அப்படிதான் இருந்து வந்தான். என்று மனிதன் தன் அறிவின் உன்னதத்தை உணர்ந்து கொண்டானோ அன்று முதல் மனிதனுக்குள் நிகழ்ந்த மாற்றங்கள் மனிதனுக்கு பல விஷயங்கள் மீது பற்றுதலை அதிகப்படுத்தியது...கற்கள் கொண்டு தன் உறைவிடம் செய்ய ஆரம்பித்தான், பணம் கண்டு பிடித்து வணிகம் செய்ய கற்றுக்கொண்டான் கடலில் கப்பல் செலுத்தி கரைகளை கடக்கலானான். படி படியாக வளர்ந்த மனிதன் அது வரை நிகழ்ந்த மிக அளவான வளர்ச்சியால் மிருகத்தில் இருந்து தன்னை வேறு படுத்தி மனிதன் என்ற உருவம் அடைந்தான். அறிவின் வளர்ச்சி மனிதனின் ஆசையை மேலும் வளர்த்தது அறிவியல் செய்தான், மனிதனின் அறிவு மேலும் வளர்ந்தது அணுக்களை படித்தான், மனிதனின் அறிவுக் கண் மேலும் திறந்தது வின்வேளிகளையும் தொகுத்தான்...இப்படி இந்த மாற்றங்கள் நிகழ பல ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. மேற்கூறிய ஆசை மனிதனை மிருகங்களிடம் இருந்து பிரித்து தனிப்பட்டவனாக மாற்றியது மனிதன் என்கிற மிருகம் முழு மனிதன் ஆனான். ஆம் மனிதனை மனிதங்க மாற்றியது மனிதனின் ஆசை தான்.
இந்த ஆசை என்கிற உணர்வு அதிகமாக மாறியதன் விளைவு மீண்டும் மனிதன் மிருகமாக மாறினான்,....
"animal to man & man to animal again" இதை தான் இந்த கட்டுரையின் தொடர்ந்து வரும் பதிவுகளில் பார்க்கப்போகிறோம்
இந்த கட்டுரையின் தொடர்ச்சியில் மீண்டும் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது - உங்களில் ஒருவன் - அ. ஜோசப் கேமிலஸ்

கோடை காலம்
இரவிலும்
காற்றில் நெருப்பின் நிறம்
பகலிலோ
மரங்களின் அசையா முகம்
வியர்வை துளியோடு
உயிரின்
சொட்டுக்கள் நிலம் முட்டும்
வெயிலின் தகிப்போடு
வெறுமை
தலை கொட்டும்
நீரின் நிறம்கூட ஆற்றில் இல்லை
நிலத்தின் நிழலிலும் ஈரம் இல்லை
கதிரவனின் கிரணங்கள் காற்றோடு கலக்கும்
இது கோடையின் காலம்
மனிதனை இயற்க்கை மறுதலித்த நேரம்
காற்றில் நெருப்பின் நிறம்
பகலிலோ
மரங்களின் அசையா முகம்
வியர்வை துளியோடு
உயிரின்
சொட்டுக்கள் நிலம் முட்டும்
வெயிலின் தகிப்போடு
வெறுமை
தலை கொட்டும்
நீரின் நிறம்கூட ஆற்றில் இல்லை
நிலத்தின் நிழலிலும் ஈரம் இல்லை
கதிரவனின் கிரணங்கள் காற்றோடு கலக்கும்
இது கோடையின் காலம்
மனிதனை இயற்க்கை மறுதலித்த நேரம்
வாழ்வின் பொருள்....

இன்றோடு முடிவதில்லை இரவோடு மடிவதில்லை
வானம் நாம் பார்க்கும் வரை வாழ்க்கை அது ஓய்வதில்லை
இறப்பதற்கே யாரும் பிறப்பது இல்லை - ஆனால்
முற்றுபெறாத துவக்கங்கள் என்றும் அர்த்தங்கள் செய்வதில்லை
பிறப்பை போல் புதிரும் இல்லை,
இறப்பை போல் இருளும் இல்லை.
உயிரின் பொருள் உணர்ந்துவிட்டால்,
உயிர் வாழ்தலில் பொருளும் இல்லை.
கல்லறைகள் கற்பிக்கும்
படிப்பினை படித்தவன்
இழப்பையும் இழக்கிறான்
இருக்கையில் சிரிக்கிறான்
உல்லாசம் சில காலம்
உயிர் கரைந்து பல நேரம் - இன்
நியதியை உணர்ந்தவன்
நிம்மதியை ருசிக்கிறான்
மண்ணோடு விழுகையில்
நிழல்கூட நமதில்லை - நம்
உடல்கூட நிலையில்லை
நமக்காக நாம் வாழுகையிலும்
நான் என்ற சொல்லுக்கு
அர்த்தம் மட்டும் என்றுமே புரிவதில்லை
மனிதனைத் தேடி 3'ஆம் பாகம் - நிம்மதியும் வெற்றியும்

மீண்டும் ஒரு பதிவோடு உங்களில் ஒருவனாக உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சிக்கொள்கிரேன்...
நேற்றும், இன்றும், என்றும் மனிதனின் ஆசை - நிம்மதியான ஒரு வாழ்க்கை
ஆனால் பெரும்பாலான நேரங்களில் நிம்மதி என்பது நமக்கு நரி தேடிய திரட்சைக்கனியாக எட்டாத உயரத்தில் இருக்கிறது, இதற்க்கு மிக முக்கிய காரணம் நம்மை நாம் இந்த உலகத்தில் தொலைத்துவிட்டது தான். எப்படி நமது வாழ்க்கையை நாம் தொலைத்தோம்? பின் வரும் கட்டுரையை படித்துப் பார்த்தல் உங்கள் வாழ்க்கையின் கடந்த காலமும் நிகழ் காலமும் உங்கள் கண்முன்னே நிழலாடும், அப்பொழுது வாழ்க்கையை நாம் தொலைத்துவிட்டு எப்படி வாழ்கிறோம் என்பதையும் அறிந்துகொள்வீர்கள்.
வாழ்க்கையை இப்படி வகுத்துக் கூறலாம்:-
நமது தேவை இன்னது என்பதை நாம் அறியாதவர்களாய் பல காலம்,
நமது தேவை இது என்று எண்ணி தவறான ஒரு தேடலில் இறங்கி பின் தெளிவுற்று பின்வாங்கி சில காலம்
நமது தேவை இன்னது என்று அறிந்திருந்தும், சூழ்நிலையின் காரணமாக நமது தேவையை மறந்து அல்லது மறுதலித்து சில காலம்,
நமது தேவை இன்னது என்று அறிய வரும் காலத்தில் நமது பருவங்கள் கடந்து விட்ட வருத்தத்தில் சில காலம்
நமது வாழ்க்கையின் கடந்த காலத்தை புரட்டிப் பார்க்கையில் இப்படித்தான் பல தோல்விகளும் வருத்தங்களும் நமக்கு மிஞ்சும்.... எட்டி இருக்கும் கணியை எட்டி பிடித்த வெற்றியாளர்கள் இந்த உலகத்தில் கொஞ்சமே, அவர்களை சந்தனையளர்கள் என்று உலகம் அழைக்கிறது, எஞ்சியவர்கள் சாமான்யன் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். இப்படி சாமான்யன் என்று சொல்லிக்கொள்ளும் மனிதர்களின் ஆழ் மனதில் ஆறாத ஒரு வேதனை என்றுமே நிலைத்திருக்கும், அது அவன் தேடிய அவனது தேவை அவனுக்கு கிடைகாது போன வருத்தம், இந்த வருத்தம் தான் ஒரு மனிதனை நிம்மதி எங்கே என தேடசெய்கிறது....
உங்களை நீங்களே ஒரு கேள்வி கேட்டு பாருங்கள் நண்பர்களே, இன்று உங்களிடம் இருக்கும் உறவுகள், உடமைகள் உங்களுக்கு நிம்மதியை தருகிறதா என்று, பலருக்கு இதன் பதில் இல்லை என்றே தோன்றும் காரணம் நீங்கள் உங்களுக்கு வாய்த்தவற்றைக் கொண்டு வாழ பழகிக்கொண்ட சாமான்யன்கள். உங்களின் தேவைகளையும், தேடல்களையும் உங்களின் சூழ்நிலையால் மறுதலிக்கக் கற்றுக்கொண்ட உலகவாசிகள். இப்படி வாழ்வோர் தண்ணீருக்குள் அழும் மீனை போன்றவர்கள், உங்களின் வேதனையை நீங்கள் புன்னகை என்ற வர்ணம் பூசி மறைத்துக்கொள்ள தெரிந்த மந்திரவாதிகள்.
நமக்கு பற்றற்ற ஒரு சூலில் நம்மை நாம் புகுத்திக்கொள்வதால் நமக்குக் கிடைப்பது நிம்மதியற்ற வாழ்க்கை மட்டுமே. அலைகளை மோதிக் கிழிக்கும் கப்பல் மட்டுமே கரை சேரக்கூடும், நிலத்தை முட்டி முளைக்கும் விதைகள் மட்டுமே மரமாகக் கூடும்.
நண்பர்களே வெற்றியாளர்களை யாரும் பிறப்பால் செய்துவிடுவதில்லை, ஒவ்வொரு வெற்றியாளனும் தன்னுடைய தேடலை அறிந்தவனாய் இருக்கிறான் அந்த தேடலில் தன்னை முழுமையாக செளுத்திக்கொள்கிறான். நாமும் வெற்றிபெற நிமதியை நம் மனதிர்க்குதர நான் செய்யவேண்டியது இதுதான். நமது வாழ்க்கையின் பற்று இன்னது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் அதை அறிந்து கொண்ட மறுகணமே அந்த பற்றுக்கான தேடலில் நம்மை நாம் செலுத்த வேண்டும். ஒரு நேர்த்தியான மாலுமி கப்பலை செளுதுவதைபோல நாமும் நமது வாழ்க்கையை நமக்கு பற்றுமிக்க செயலில் செலுத்தினால் நிம்மதியும் வெற்றியும் என்றுமே எந்த மண்டிதனுக்குமே எட்டாத கணியல்ல.
வாருங்கள் தோழர்களே நிம்மதி என்பது உலகெங்கும் உங்களுக்காகக கொட்டிக்கிடகின்றது ஆனால் உங்கள் விழிகளில் தான் ஏதோ ஒரு திரை விழுந்து நிம்மதியை மறைக்கின்றது. உங்களின் விழித்திரையை விசலமாக்குங்கள், அகச்சிரையை உடைத்தெறியுங்கள் நிம்மதியை சுவைத்து மகிழுங்கள்.
நிம்மதியாய் வாழ்ந்திட உனது தேவையை முதலில் அறிந்துகொள் பின் உனது தேவையை அடைய உன்னை நீ தயார் செய்துகொள் பிறகு வாழ்க்கை களத்தில் நம்பிக்கையோடு போராடு நிச்சயம் வெற்றியும் நிம்மதியும் உனக்கு என்றுமே உடனிருக்கும்...
மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திக்கும்வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்களில் ஒருவன் அ. ஜோசப் கேமிலஸ்....நன்றிகள்
உனக்காகவே நீ...

அவனும் இவனுமல்ல
உன் வாழ்வை செதுக்குதல் நீயே
அகமும் புறமுமென
உன் வலிகள் சும்மப்பது நீயே
உச்சாணிக்கொம்பில் நீ ஏறி நின்றால்
ஊரார் உன்னை சிரமேற்றிச் சுமப்பர்
தவறி நீ கீழே வீழ்ந்தால்
தவறு உணதென்பர்
சமுதாயம் சிரிக்குமே
உலகமுனை பழிக்குமே - என
எண்ணி வாடுதல் வீணே தோழா!!!
காலம் கரைந்துபோனால்
காற்றாய் மறைந்து போகும்
சுற்றம் முற்றமெல்லாம்
வெறும் கானல் நீரைப்போல
வா வாழ்ந்துவிடு உனக்காக
நீ நீயென்பது மட்டும் நிஜமாக....
கோவமேனும் பெருங்கடல்....

ஆழிசெய் யோசை தனையோப்ப
அகங்காரம் மனதுக்குள்
ஆரவாரம் செய்திடுமே ...
அனல் கக்கும் எரிமலையின் தனலோப்ப
விழி வழியே கோபத்தீ
வழிந்தோடிடுமே...
மடைமீண்ட அனைவெள்ளம் தனையோப்ப
கடும் சொற்கள்
இதழ் மடை கடந்திடுமே..
அமைதியெனும் ஆண்டவனை
மறந்திட்ட பொழுதுகளில்
முன் சொன்ன மூன்றுமே
ஒருசேர நிகழுமே
கோவத்தால் தொலைத்த ஞானத்தால்
கொட்டிய சொல் மீண்டும்
கை சேர்வதில்லை...
செய்திட்ட தீங்கும் எளிதில்
நீங்குவது இல்லை
அறிவே நல்லறிவே நீ அழிந்ததும் ஏனோ?
மதியே நுன்மதியே நீ மறைந்ததும் ஏனோ?
கோவமேனும் கடலுக்குள்
குதித்திட்ட மனிதன்
பிறனையும் கொன்றான்
தானும் மாண்டான்
தொலைந்து போ கோவமே
உன்மீது மனித இனமே கோவமாய் உள்ளது
மறைந்து போ கோவமே
உன்னாலே கலைந்திட்ட உறவுகளின் கூற்றிது
கோவமேனும் கடல் கடக்க - மானுடா
அமைதியெனும் படகை பிடி
அமைதியிலே நீ நிலைக்க - மானுடா
உன்னையே நீ படி....
உறவுகொள்!!!

உறவுகொள் உறவுகொள்
உலகோடு உறவுகொள்
உன்னதமாய் உறவுகொள்
உலகோடு உறவுகொள்
கடலோடும் அலையோடும்
காற்றோடும் மலரோடும்
உறவுகொள்
இன்பத்தை உணர்ந்துகொள்ள
இயற்கையோடு உறவுகொள்
ஒலியோடும் ஒளியோடும்
விசையோடும் வினையொடும்
உறவுகொள்
அறிவியலை அறிந்துகொள்ள
நின் அறிவோடு நீயே உறவுகொள்
நித்திரையின் சுகமறிய
உழைப்போடு உறவுகொள்
வறுமையின் சுமையரிய
பசியோடு உறவுகொள்
மானோடும் உறவுகொள்
மீனோடும் உறவுகொள்
குயில் குரலில் நீ பட
மயில் போல நடமாட
குயிலோடும் உறவுகொள்
மயிலோடும் உறவுகொள்
நூலோடு உறவுகொள்ள
நின் நுண்ணறிவை உணர்ந்துகொள்
வேலோடு உறவுகொள்
உன் வீரமதை தெரிந்துகொள்
நட்பின் நலமறிய
நெஞ்சோடு நட்புகொள்
நட்போடு உன் நண்பனோடு உறவுகொள்
உறவுகொள் உறவுகொள்
உலகோடு உறவுகொள்
“பூமி தொடும் முன்பே கொலை செய்யப்பட்டவன்”
மலராத மொட்டுக்கள் - இவை
மலரும் முன்னமே
கல்லறை அடைந்தவை...
இந்த பதிவும் அத்தகைய கல்லறையில் உறங்கும் மலராத மொட்டுக்களை பற்றித்தான்...
சின்ன சின்னதாய் - 2
ஒரு பிள்ளைக்கு தாய்,
கருணையுற்றதால் - நீ
உலகிற்கே தாய்
உலகிற்கே தாய்
அன்னை தெரேசா!!!
சட்டையும் காலுறையும்
பொதுவாகிப் போனதால்- தனி
அடையாளம் தேடுகிறோம்...
ஆண்கள்!!!
பொதுவாகிப் போனதால்- தனி
அடையாளம் தேடுகிறோம்...
ஆண்கள்!!!

முயற்சிக் கதவுகளையல்ல
தேடல் ஜன்னல்களையேனும் திறந்துவிடு
உன் வாழக்கையில் வர காத்திருக்கிறேன்
வாய்ப்பு!!!
கலாச்சாரத்தின் கற்பழிப்பு,
காலதேவனின் ஆடை அவிழ்ப்பு
நாகரீகம்!!!

வரி வழியே அரசாங்கம் வாழ
குடி வழியே மக்களை கொள்ளும்
மழிவு விலை அநியாயக் கடை
டாஸ்மாக்!!!
யார் இங்கே துறவி?

முற்றும் துறந்த முனிவர்கள் இன்று முழுதும் திறந்து காண்பிக்கும் கட்சிகள் கணினி வழியே நிரம்ப துவங்கி விட்டது. காவிக்குள் ஒளிந்து கொண்டு காம பசி தீர்துக்கொண்டும் வாழும் துறவிகள் இன்று அதிகம் பெருகி விட்டனர், இதற்க்கு காரணம் கேட்டால் ஏமாறும் மனிதர்கள் என்று துறவிகளும், ஏமாற்றும் துறவிகள் என்று சாமான்னியனும் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். உண்மையில் இங்கே துறவி என்னும் ஒரு சொல்லுகே இடம் இல்லை காரணம் துறவிகள் உடலின் சாதாரண தேவையான உணவையும் கூட துச்சமாக மதிப்பவர்கள், அனால் இன்றைய காவி உடை மனிதர்களோ கார், பங்களா, பகட்டான உணவு, அழகான சிஷ்யைகள் என சுகபோக வாழ்கை வாழும் மாடர்ன் ஆசாமிகள்.
ஒரு மனிதன் தன் மனித வாழ்வில் பற்று இழக்கும் பொழுது ஏதோ ஒரு சில பதில் தெரியாத தேடலில் இறங்குகிறான் அந்த தேடல் அவனை பெரும்பாலும் கொண்டு சேர்க்கும் இடம் தனிமை. இந்த தற்காலிக தனிமையை பெரும்பாலனோர் ஏதோ ஆன்மிக தளமாக என்னிகொள்ளும் விபரீதம் தான் இந்த துறவிகள் எனும் கபட நாடகத்தின் மூல காரணம். மேலும் இன்றைய மனிதர்கள் மிகவும் விளம்பரதாரிகள் புரியாத வார்த்தைகளாலும் பல அழகான பேச்சுகளாலும் மக்களை கவர்வது மிகவும் எளிதாகி விட்டது இப்படி பேச்சு திறனில் பளிச்சிடுபவர்கள் புகழ் பெற நினைக்கும் பொழுது அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் இந்த காவி உடை. இப்படி காவி தரிக்கும் தற்காலிக துறவிகள் செய்யும் தவறுகள் அவர் சார்ந்த சமயத்தின் மீதும் களங்கத்தை சுமத்துகிறார்கள். காவியும் வெண்மையும் தூய்மையின் நிறங்கள் அதனாலையே தான் துறவிகள் அந்த நிறத்தை ஆடையென தரிக்கிறார்கள், இந்த ஆடையை தரித்துக்கொண்டு தான் இன்று துறவிகள் பலபொல்லாத காரியங்கள் செய்து வருகிறார்கள்.
புலனடக்கமும் மன அடக்கமும் துறவிகளின் முக்கிய அறமாகும் இதை எளிதில் மறந்து விடும் இன்றைய துறவிகள் 'எங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் மற்றவர்கள் நுழைந்து பார்க்க அவசியம் இல்லை' என்கிறார்கள். செய்வதை செய்துவிட்டு இவர்கள் கொட்டும் சப்பைகட்டுகளுக்கு மனிதர்கள் பலரும் மண்டை அசைப்பது அதனினும் கொடுமை. உண்மை துறவிகள் தன்னலம் மறந்தவர்கள், அவர்களுக்கு அவர்களுடைய இச்சைகள் கண்முன்னே நிற்ப்பதில்லை, அவர்களின் உறக்கத்திலும் கூட உறுப்புகள் அவர்களை உறுத்தாது. ஆனால் இன்றைய நிகழ்வுகளை பார்க்கும் பொழுது தேனொழுக பேசும் துறவிகளை கண்டால் கால ஆண்டு தொலைவு ஓடும் அளவிற்கு பயமாக இருக்கிறது. உண்மையில் இவர்களின் துறவறத்தில் அடிப்படை தவறு இருக்கிறது. எந்த ஒரு விஷயம் ஒரு மனிதனுக்கு மறைத்து வைக்கப்படுகின்றதோ அதை ஆராய்ந்து பார்க்கும் 'EXPLORING MIND' மனிதனின் இயல்பான விஷயம். காமம் என்பது இந்த துறவிகளுக்கு திகட்டாத அளவிலும் தேடி சுவைக்கதூன்டாத அளவிலும் கற்றுகொடுக்க பட வேண்டும். சுவைகளை சுவைத்து பார்த்தால் தான் அதன் அம்சங்களை சொல்ல முடியும் அதனால் காமத்தின் அளவுகோலை இந்த துறவிகளுக்கு அளவாக அறிய செய்ய வேண்டும் பின் அதை தவிர்பதின் காரணத்தை அழுத்தமாக புரிய வைக்க வேண்டும். வேதங்களை மட்டும் படிக்கும் துறவிகள் வேதத்திலும் அதைவிளக்கும் வேதாந்தத்திலும் சிறந்து விளங்கியும் சுயக்கட்டுபாட்டை இழக்க நேருவதால் துரவுத்தன்மையை இழக்க நேரிடுகின்றது எனவே காமத்தின் மீது இருக்கும் தாகத்தை தீர்க்க இவர்களின் புலனடக்கத்தின் மேன்மையை கற்று கொடுக்க ஆதீனங்களும் துறவு மடங்களும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். யார் எந்த மொழி கூறினாலும் அதை அப்படிஏய் ஏற்றுக்கொள்ளாமல் நமது சுய அறிவிற்குள் கொஞ்சம் செலுத்தி ஆராய்ந்து எடுத்துக்கொள்ள சாமான்யர்கள் நாமும் கற்றுக்கொள்ள வேண்டும். துறவிகளை குற்றம் சொல்ல தேவை இல்லை காரணம் நம்மை பக்குவ படுத்திக்கொள தேவையான திறன்கள்அனைத்தும் தனி மனிதனிடமும் கொட்டிகிடக்கின்றது அதை தேடி பிடிப்போம் நமக்கு தேவையான அகசிந்தனைகளை நமக்குள் இருந்தே நாம் பெற்றெடுப்போம்
மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்களில் ஒருவன் அ. ஜோசப் கமிலஸ்.
Subscribe to:
Posts (Atom)