அவனுக்கென்று பெயர் ஒன்றும் இல்லை அவனை அவன் என்றே
அழைக்கலாம் கரணம் அவன் நம்மை போல சாதாரணன் தான். முப்பது வயதை தொட்டு
விடும் பருவம், ஒல்லியுமற்ற பருமனுமற்ற தேகம், ஒடிந்து போன கண்கள்,
முழுதும் மழிக்கப் படாத மீசையும் தாடியும் அவனை ஒரு சாதாரண மனிதனாகவே
காட்டியது. திருவல்லிகேணியில் புத்துபோல பெருகி இருக்கும் மேன்ஷன்களில்
அணைத்து மேன்ஷன்களிலும் இவனை போல பலர் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவன்
தான் இவன். காலை எழுந்து இரவு உறங்கும் வரை தனிமையின் வெறுமை கழிய
புகைத்துக்கொண்டே இருப்பான், இதனால் அவனது அரை எங்கும் புகை வெள்ளோட்டம்
போட்ட படியே இருக்கும் இவனது சட்டை முதல் அந்த அறையின் அணைத்து
பொருள்களிலும் சிகரட்டின் மனம் படிந்தே இருந்தது. புகை பிடிக்கும்
வேளைகளில் அவனுக்கு ஒரு வினோத பழக்கம் இருந்தது, அது அவன் சிகரெட்டை பற்ற
வைத்த பின்பும் சிகரெட் லைட்டரை எரிய விட்டு அணைத்து மீண்டும் எரிய விட்டு
அதில் வரும் நெருப்பை உற்று நோக்கிய படி இருப்பான். ஒவ்வொரு முறை
நெருப்பு எரிய துவங்கும்பொழுதும் அவனுக்குள் ஏதோ வெளிச்சத்தை பிறப்பித்தது
பின் அதை அணைத்து விடும் பொழுது அவனுக்கு ஏதோ ஒரு தேடலை முடித்த நிறைவு
கிடைத்தது . மீண்டும் அதை பற்ற வைக்கும் பொழுது அவனுக்கு நெருப்பு ஒரு
வினோத பொருளாக தெரிந்தது, ஒவொரு முறையும் நெருப்பு ஏதோ புது உருவம் எடுத்து
நடனம் ஆடுவது போல் அவன் உள்மனது உணர்ந்தது. கண்களை சிமிட்டி, புருவத்தை
உயர்த்தி, நெற்றியை சுருக்கி அவன் நெருப்பின் அழகியலை ரசித்து ரசித்து
சிகரட்டை புகைப்பான். அவனது அதிக பட்ச நேரம் செலவிட படுவது இப்படி
புகைப்பதில் தான், இன்னும் சொல்ல போனால் சிதறிக்கிடக்கும் சிகரெட்
பெட்டிகளும் அதனுள் சுருண்டு கிடக்கும் சிகரெட் துண்டுகளும் தான் அவனது
அறையை ஆக்ரமித்து இருந்தது அதை தவிர அந்த அறையின் மூலையில் ஆணியில்
தொங்கும் அவனது அழுக்கு துணிகளும், அந்த அறையின் என்றுமே மூடப் படாத
அளமரையினுள் இருக்கும் அவனது கை கடிகாரமும் சில பழைய வார இதழ்களும் தான்
இருந்தது. இப்படி ஒரு சாதாரணனின் வாழ்க்கை முறையும் மிகச்சாதரனமாகவே
இருந்தது.
அவனது மேன்ஷனுக்கு கீழே இருக்கும் பெட்டிக் கடையில் சிகரெட் மற்றும் லைட்டர் வாங்குவதும், அவனது ஹீரோ ஹோண்டா வண்டியில் அலுவலகம் செல்வதும், மீண்டும் அறைக்குள் அடங்குவதும் தான் அவனது வாழ்க்கை, கோயில்களுக்கு அவன் அதிகம் செல்வது இல்லை அனால் கடவுள் பக்தியற்றவன் இல்லை என்பதற்கு அடையாளமாக தினமும் அவன் செல்லும் வழியில் இருக்கும் சிறிய கோயில் பிள்ளையார் மடத்தை வணங்கி விட்டே செல்வது அவன் வழக்கம். பெரும்பாலும் அவன் பெண்களை கவனிப்பது இல்லை ஆனால் மாடர்ன் உடையில் அலையும் பெண்களை இச்சையோடே பார்த்தாலும் ஏதோ புழுவை பார்ப்பது போல வெறுப்பாக பார்ப்பான் அதைத்தவிர அவன் பார்க்கும் மற்ற இரண்டு பெண்களில் ஒருத்தி அவன் சிகரெட் வாங்கும் பெட்டிக்கடியில் தினமும் காலை இவன் வாங்கும் அதே நேரத்தில் சிகரெட் வாங்கும் பெண், நல்ல குடும்பப் பாங்காக உடை உடுத்தி இருக்கும் அந்த பெண் சிகரெட் வாங்குவது அவனுக்கு வியப்பாக இருக்கும் அவளை வெறித்து பார்த்து விட்டு நகர்ந்து விடுவான் இன்னொரு பெண் இவன் தினமும் பார்க்கும் அந்த சிறிய பிள்ளையார் மடத்தின் முன் நின்று அழுது கொண்டே இருக்கும் பெண், அவளும் குடும்பப் பாங்காக இருக்கும் ஒரு ஏழை பெண் என்பது அவளது உடையிலும் அவளுது அழுது வடிந்த முகத்திலும் தெரியும், அவளையும் வெறித்து பார்த்து விட்டு ஏதும் சிந்தனை இன்றி பொய் விடுவது அவனது பழக்கம், இவர்களை தவிர இவன் தினமும் சந்திக்கும் இன்னொரு மனிதனும் இருந்தான் அவன் இவனது மேன்ஷனின் வாசலில் படுத்துக் கிடக்கும் ஒரு மனநலம் குன்றிய மனிதன், அந்த மனிதன் அவன் மீது ஆறு ஏழு சட்டையும், பத்து கால் உறையும் அணிந்துகொண்டு இருந்தான் அவனது பாதங்கள் கூட தெரியாத அளவிற்கு துணிக்குள் தன்னை புகுத்திக் கொண்டு இருப்பான்.
இவர்களை பார்த்தும் இவர்கள் எதோ வினோதமாணவர்கள் என்பதை உணர்ந்திருந்தும் அவன் அவர்களை அதிகம் சட்டை செய்து கொள்வதில்லை வெறும் ஒரு வெரிச்ச பார்வை வீசி செல்வதிலும் இவன் நம்மைப்போல சதரனனாகவே இருந்தான்.
அவனது அன்றாட நாட்கள் இப்படி நகர்ந்து கொண்டிருந்த வேலை ஒரு நாள் அவனது வேலை பறிபோனது, அமெரிக்காவில் ஏதோ பொருளாதார கோளாறாம் அதன் காரணமாக அவரகளது அலுவகத்தில் அல்குரைப்பம் அமெர்கிய பொருளாதாரம் நமது திருவல்லிக்கேணி சாதாரணனின் வேலையையும் பறிக்க அவன் வெறுப்போடு அவனது அறைக்கு திரும்பினான், எதிர்பாராத ஏமாற்றம் அவனுக்கு ஏதோ எண்ணங்களை கொடுத்தது, எதை சிந்திப்பது எதை விடுப்பது என தெரியாமல் தலை சுற்ற துவங்கியது கையில் காசு தீரும் முன் இனொரு வேலை வேடும் என தொடர பயம் பற்றிக்கொண்டது அது முதல் அவன் வெளியில் செல்ல பயந்து அறைக்குலையே அடங்கிப் போனான், பல அலுவகங்களுக்கு வேளைக்கு மனு போட்டும் தற்போது நிலவும் சுழலால் இபோதைக்கு வேலை இல்லை என்கிற ஒரே பதிலை கேடு சலித்துப் போனான் இந்த மாற்றங்களுக்கு நடுவிலும் மாறாமல் இருந்த ஒரு நிகழ்வு அவனது புகதலும் அவன் காணும் அந்த அமூன்று நபர்களும் தான், இப்போதெல்லாம் அவர்களை கண்டு அவன் நகர்வதில்லை ஏதோ சிந்திபவனை போல அவர்களை பார்த்ததும் நின்றுவ்டுறான் ஆனால் உண்மையில் அவனது எண்ணங்கள் வெறுமையை இருக்கின்றன ஏதும் சிந்திக்க அவக்கு தோன்ற வில்லை, அவனை நெருங்கிக்கொண்டிருக்கும் அவனது வெறுமையை கண்டு அவன் மிகவும் பயந்து அறைக்குள் அடங்கின ஒரு நாள் ஒரு சிகரெட்டை எடுத்து நெருப்பேற்றியவன் அவனது லைட்டரை எடுக்க மறந்து ஏதோ சிந்தனையில் மூழ்கிப் போனான் அவனது சிந்தனையில் அவன் தினமும் பார்க்கும் அந்த சிகரெட் வாங்கும் இளம் பெண் தோன்றி தான் சிகரெட் வந்குவதின் காரணத்தை இவனுக்கு கூறுவது போல இருந்தது அவளது குரல் மேலோங்கி ஒலித்தது இந்த உலகத்தில் உள்ள எல்லா அண்களும் பெரும்பாலும் புகைக்கிறார்கள், ஆண்களே மதுக்கடைகளில் நிற்கிறார்கள், கூட்டமான பேருந்துகளில் பெண்கள் மீது உரசி இன்பம் கொள்கிறார்கள் அணைத்து ஆண்களும் பெண்களை அடக்க நினைக்கிறார்கள் ஆணாதிக்க உலகில் ஆண்கள் செய்யும் ஏதேனும் ஒரு தனிச்செயலை நானும் செய்ய நினைதேன் அதான் சிகரெட்டை வாங்குகிறேன் அதில் எனக்கு ஒரு அறப்ப சந்தோஷம் என்று கூறும் அவள் திடீரென்று அழ துவங்கினால் அழுதவள் கண்களை துடைத்து விட்டு ஒரு குரூர சிரிப்போடு நான் எந்த சிகரெட்டையும் புகைக்க வில்லை நான் வெறும் நுகர்ந்து பார்கிறேன் அதில் ஆண் வர்க்கம் பெண்கள் மீது ஊதிய புகையின் நாற்றத்தை உணர்கிறேன் நானும் அங்கள் மீது இந்த நாற்றத்தை ஓத நினைக்க வில்லை ஆனால் பெண்கள் மீது ஆண்களில் அடக்க சக்தியை நான் மறக்காமல் இருக்க இப்படி செய்கிறேன் செய்து கொண்டே இருபேன் ஆண்களை நன் வெறுக்கிறேன் அவரகளது பிடியில் என் பெண்களும் அழுவதை பார்த்து அழுகிறேன் ஆண்களை போல சிகரெட் வாங்குவதால் ஆண்களை அடக்கி விட்ட ஆனந்தத்தில் சிரிக்கிறேன் என மீதும் மீண்டுமாக சிரித்தாள் அவன் தன நினைவு தெளிந்தவனாக எழுந்த பொது சிகரெட் அவன் கையை சுட்டது கீழே விழுந்த சிகரெட் துண்டை பார்த்தவன் தனக்கு தானே பேசிக்கொள்ள துவங்கினான்.
இவன் சிந்தனை தொடரும்...(அடுத்த பதிவில் தேடல் - பாகம் இரண்டு - வெறுமை)

No comments:
Post a Comment