முகவுரை

மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சிக்கொள்கிரேன்

 நாம் பிறக்கும் முன்னமே நமக்கான வாழ்கை வடிவமைக்க படுகின்றது, நமது சுற்றங்கள் இயங்கிக்கொன்றுக்கின்றது,  நமது தேடல்ல்கள் நாம் பிறக்கும் முன்னமே துவங்கி விடுகின்றது, நமது ஆன்மீகமும் நமது உலகுமும் நமக்கு முனமே உருவாக்க பட்டவை எனவே வாழ்க்கைக்கு ஆரம்பம் என்பது உலகின் ஆரம்பம் போல ஒரு காண கிடைக்காத தேடல் தான், அதே போல இறப்போடு எந்த மனிதனின் வழக்கையும் முடிந்து போவஹ்டு இல்லை கரணம் நமது வாழ்க்கையும் அது உருவாக்கும் அதிர்வும் உலகம் இருக்கும் வரை எங்கோ ஒரு புள்ளியில் இருந்து கொண்டே இருக்கின்றது எனவே
எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையும் பிறப்பில் ஆரம்பிப்பதில்லை அது இறப்பில் முடிவதில்லை. இந்த கருத்து என்னுள் ஆழமாக விதைத்து போனதால் நான் எழுதவிருக்கும் சிறுகதைகளுக்கும் முடிவு என்பது இருக்க போவது இல்லை அது தன போக்கில் ஒரு முற்று இன்றி இயங்கிக்கொண்டே இருக்க போகின்றது. ஆம் நண்பர்களே இனி எனது பதிவதில் நான் சிறுகதைகள் எழுதப் போகிறேன் இது எனது சிறுகதைகளின் முகவுரை.

வாழ்க்கையின் பதிவாக இருக்க வேண்டும் என்பதனால் சதரனின் வாழ்க்கையை என் எழுத்தில் கொண்டு வர முயற்சிக்க போகிறேன், என் சிறுகதைகளும் மனித வாழ்க்கையை போல சுபம் போட்டு முற்று பெறாமல் ஒரு சில கேள்விகளோடும் வெளிவிகலோடும் நிலலடிக்கொண்டு இயங்கும். கதைகளில் நீங்கள் வாழ்வீர்கள் என்பது எனது அளிக்க முடியாத கருத்து.

மனித வாழ்க்கை ஒரு வெற்றிடம் இத நிரப்பிக்கொள்ள நாம் உறவுகளை ஏற்படுத்திகொல்கிரூம் இந்த உறவுகள் எதை தருகின்றன? இந்த உறவுகள் அற்ற தனிமை எதை தருகின்றது?? இந்த சமூகம் நமக்கு என்ன சொல்கின்றது?? நாம் ஏன் இங்கே வாழ்கிறோம் என்ற தேடல்கள் நிறைந்த வாழ்க்கையாக நமது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு வெற்றிடங்களை நிரப்ப முயற்சிக்கின்றோம் இப்படித்தான் என் கதையின் கதப்பதிரங்களும் செயல்பட போகிறார்கள். உங்களோடு உறவாட போகும் என் கதப்பத்திரன்களுக்கு பெரும்பாலும் பெயர்கள்  வைக்க  போவது இல்லை காரணம் பெயர்கள் ரதனிமனிதனை சுட்டிக் காண்பிக்கவே உபயோகிக்க படுகின்றன இங்கே எனது கதைகளில் வருபவர்கள் தனி மனிதர்கள் இல்லை மாறாக நமது நிஜங்களின் நிழல்கள் எனவே இவர்கள் ஒரு ஒரு மனிதனின் உருவங்கள் உங்கள் பெயர்களை சேர்த்து படிதுக்கொளுங்கள்.

என் பதிவேடுகளின் பக்கங்கள் பெரும்பாலும் புரட்ட படுவது இல்லை என்றாவது ஒரு நாள் யாரேனும் புரடிப்பர்த்தால் நிச்சயம் உங்களை இந்த கதைகளில் கண்டுகொண்டால் நானும் இந்த பதிவேடும் என் கதைகளும் பயன் பெற்றதாக ஆகும்

நன்றி
உங்களில் ஒருவன்
அ. ஜோசப் கேமிலஸ்

2 comments:

  1. நிச்சயம் உங்களை இந்த கதைகளில் கண்டுகொண்டால்!!! Awesome

    ReplyDelete