மிச்சம்...

பசித்த பின் உண்பவனுக்கு  பஞ்சம் மட்டும் மிச்சம் - இங்கே
பணமிகு மனிதர்க்கு நோய் நொடியே மிச்சம்
உழுதவனுக்கு  ஏர் மிச்சம்
நெய்தவனுக்கோ தறி மிச்சம்
கொடுதவனுக்கோ  தேய்ந்த செருப்பு  மிச்சம்
வாங்கியவனுக்கு கடன்கார பட்டம் மிச்சம்
செத்தவனுக்கு உடல் மிச்சம்
நடப்பவனுக்கு நாளைய நாள் மிச்சம்
காத்திருத்தல் காதலனுக்கு மிச்சம்
காத்திருந்தால் காதல் என்றுமே மிச்சம்
கல்யாணம் ஏழை பெண்ணுக்கு மிச்சம்
குழந்தையோ மலடிக்கு மிச்சம்
முதுமையில் தனிமை மிச்சம்
இளமையில் கல்வியே மிச்சம்
முத்தங்கள் காதலின் மிச்சம்
சப்தங்கள் மௌனத்தின் மிச்சம்
உலகமே கதிரவன் மிச்சம்
படைத்தவன் தூவிய எச்சம்

No comments:

Post a Comment