
மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சிக்கொள்கிரேன்!!!
மனிதன் என்கிற மிருகத்தை தவிர மற்ற எல்லா மிருகங்களுக்கும் பெரும்பாலும் வால் இருக்கிறது. நன்றியை தெரிவிக்க நாய் தன் வாலை ஆட்டுவதும், ஈக்களை விரட்ட மாடுகள் தன் வாலை அசைப்பதும் தவிர வாலுகென்று ஒரு முக்கிய பனி எதுவும் இல்லை, பின் எதற்காக இந்த உபயோகமட்ட்ற ஒரு உறுப்பை இந்த மிருகங்கள் தாங்கி இருக்கின்றன என்ன யோசிக்கவெய்த்து என்னை பல நேரங்களில் வால் தொந்தரவு செய்திருக்கின்றது. பல வேளைகளில் நாய்கள் தன் வலை அசைத்து என்னை பரிகசிப்பது போல தோன்றுவதும் உண்டு.
உங்களில் பலர் என்னை போலவே பல வேளைகளில் வில் போல வளைந்த நாயின் வாலை நேர் செய்ய முயற்சித்து இருப்பீர்கள் இன்னும் பலர் மலை அளவு முயன்றும் நிமிர்த்த முடியாது அந்த நாய் வாலை கையால் நசுக்கி நாய் கடி வங்கி இருப்பீர்கள் அந்த அளவுக்கு இந்த நாயின் வால் நம்மை பல வேளைகளில் பாதித்து இருக்கிறது. ஒரு வகை உயர் ஜாதி (மனிதன் வகை படுத்தியதால் நாய்களிலும் கூட ஜாதிகள் பிரித்து விட்டோம்) நாய்களுக்கு வால் வெட்டபட்டால் தான் அதன் மதிப்பு கூடுமாம் என நான் கொடுத்த அறிவுரையை ஏற்று அந்த வகை நாய் ஒன்றை வால் வெட்டுவதற்காக என் நண்பர் தன் நாயை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். தன் வால் வெட்டுப்பட போவதை அறியாத அந்த பரிதாப ஜீவன் தன் வாலை அசைத்தபடியே மருத்துவமனைக்கு சென்றது. மருத்துவர் அந்த வாலை வெட்டி எடுத்த பிறகு நான்கு ஐந்து நாட்கள் அந்த நாய் வெறி பிடித்தது போல சுற்றி வந்தது, மேலும் அது தன் வால் தானாக மறைத்து கொள்கிறதோ என்று எண்ணி தன் பட்டத்தை திருப்பி திருப்பி பார்த்தது எனக்கு பரிதாபமாக தோன்றியது. சில களம் இப்படி தேடி பார்த்து கிடைக்காமல் போனதால் அது தன் வாலை மெல்ல மெல்ல மறந்து போனது, எப்பொழுதாவது பொழுதுய்கள் வால் அசைப்பதை கண்டுவிட்டால் அது வால் இல்லாத தான் பின்புறத்தை மட்டும் ஆடிக்கொள்வது உண்டு. இதை பார்த்த பொழுது அந்த நாயின் மீது எனக்கு ஒரு பரிதாப உணர்ச்சி தோன்றியது ஈதோ அந்த நாயின் இயல்புத்தன்மையை வெட்டி எடுத்துவிட்டது போன்ற குற்றுனர்சியும் எனக்கு உண்டானது. மறுமுறை இந்த உணர்வோடு அந்த நாயை பார்த்தபொழுது நாயின் புட்டத்தில் வெட்டி எறிந்த வால் ஆடுவதைப்போன்ற பிரமையும் தோன்றியது. பல வேளைகளில் மைதனுக்கும் ஒரு காலத்தில் வால் இருந்து அது ஏதோ ஒரு காரணத்தால் வெட்டப்பட்டு இருக்குமோ என கூட தோன்றியது உண்டு. நம் பின் புறத்தில் முதுகுத்தண்டின் இறுதியில் வால் வெட்ட பட்டது போன்ற ஒரு அமைப்பு இருப்பது போன்றும் எனக்கு தோன்றி இருக்கிறது இதன் காரணமாக நானும் கண்ணாடியில் வால் இருந்த தடம் தெரிகிறதா ன்ன பார்த்தது உண்டு.
இந்த வெட்ட பட்ட வாலை போலதான் நாம் பல வேளைகளில் நமக்கு தேவை அற்றது என எண்ணி நமது பல இயல்புகளை பல வேளைகளில் வெட்டி எரிந்து விடுகின்றோம். மற்றவர்கள் நம்மை தவறாக நினைப்பார்கள் என்றும், ஊருக்கு நல்லவன் நான் என்றும் சொல்லிக்கொள்ள பல வேளைகளில் நாம் நமது இயல்பை வெட்டி எரிந்து விடுகின்றோம் உண்மையில் நமது வால் நமக்கு பொருத்தமானதுதான். நமது வாலை நாம் காப்பாற்றிக்கொண்டால் நை வாலை பாத்து பொறாமைப்பட தேவை இல்லை.
மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்களில் ஒருவன் அ. ஜோசப் கேமிலஸ்
மற்றவர்கள் நம்மை தவறாக நினைப்பார்கள் என்றும்,
ReplyDelete" ஊருக்கு நல்லவன் நான் "
என்றும் சொல்லிக்கொள்ள பல வேளைகளில் நாம் நமது இயல்பை வெட்டி எரிந்து விடுகின்றோம்
Its True Bro!!!