கோவமேனும் பெருங்கடல்....


ஆழிசெய் யோசை தனையோப்ப
அகங்காரம் மனதுக்குள்
ஆரவாரம் செய்திடுமே ...

அனல் கக்கும் எரிமலையின் தனலோப்ப
விழி வழியே கோபத்தீ
வழிந்தோடிடுமே...

மடைமீண்ட அனைவெள்ளம் தனையோப்ப
கடும் சொற்கள்
இதழ் மடை கடந்திடுமே..

அமைதியெனும் ஆண்டவனை
மறந்திட்ட பொழுதுகளில்
முன் சொன்ன மூன்றுமே
ஒருசேர நிகழுமே

கோவத்தால் தொலைத்த ஞானத்தால்
கொட்டிய சொல் மீண்டும்
கை சேர்வதில்லை...
செய்திட்ட தீங்கும் எளிதில்
நீங்குவது இல்லை

அறிவே நல்லறிவே நீ அழிந்ததும் ஏனோ?
மதியே நுன்மதியே நீ மறைந்ததும் ஏனோ?

கோவமேனும் கடலுக்குள்
குதித்திட்ட மனிதன்
பிறனையும் கொன்றான்
தானும் மாண்டான்

தொலைந்து போ கோவமே
உன்மீது மனித இனமே கோவமாய் உள்ளது
மறைந்து போ கோவமே
உன்னாலே கலைந்திட்ட உறவுகளின் கூற்றிது

கோவமேனும் கடல் கடக்க - மானுடா
அமைதியெனும் படகை பிடி
அமைதியிலே நீ நிலைக்க - மானுடா
உன்னையே நீ படி....

No comments:

Post a Comment