
முற்றும் துறந்த முனிவர்கள் இன்று முழுதும் திறந்து காண்பிக்கும் கட்சிகள் கணினி வழியே நிரம்ப துவங்கி விட்டது. காவிக்குள் ஒளிந்து கொண்டு காம பசி தீர்துக்கொண்டும் வாழும் துறவிகள் இன்று அதிகம் பெருகி விட்டனர், இதற்க்கு காரணம் கேட்டால் ஏமாறும் மனிதர்கள் என்று துறவிகளும், ஏமாற்றும் துறவிகள் என்று சாமான்னியனும் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். உண்மையில் இங்கே துறவி என்னும் ஒரு சொல்லுகே இடம் இல்லை காரணம் துறவிகள் உடலின் சாதாரண தேவையான உணவையும் கூட துச்சமாக மதிப்பவர்கள், அனால் இன்றைய காவி உடை மனிதர்களோ கார், பங்களா, பகட்டான உணவு, அழகான சிஷ்யைகள் என சுகபோக வாழ்கை வாழும் மாடர்ன் ஆசாமிகள்.
ஒரு மனிதன் தன் மனித வாழ்வில் பற்று இழக்கும் பொழுது ஏதோ ஒரு சில பதில் தெரியாத தேடலில் இறங்குகிறான் அந்த தேடல் அவனை பெரும்பாலும் கொண்டு சேர்க்கும் இடம் தனிமை. இந்த தற்காலிக தனிமையை பெரும்பாலனோர் ஏதோ ஆன்மிக தளமாக என்னிகொள்ளும் விபரீதம் தான் இந்த துறவிகள் எனும் கபட நாடகத்தின் மூல காரணம். மேலும் இன்றைய மனிதர்கள் மிகவும் விளம்பரதாரிகள் புரியாத வார்த்தைகளாலும் பல அழகான பேச்சுகளாலும் மக்களை கவர்வது மிகவும் எளிதாகி விட்டது இப்படி பேச்சு திறனில் பளிச்சிடுபவர்கள் புகழ் பெற நினைக்கும் பொழுது அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் இந்த காவி உடை. இப்படி காவி தரிக்கும் தற்காலிக துறவிகள் செய்யும் தவறுகள் அவர் சார்ந்த சமயத்தின் மீதும் களங்கத்தை சுமத்துகிறார்கள். காவியும் வெண்மையும் தூய்மையின் நிறங்கள் அதனாலையே தான் துறவிகள் அந்த நிறத்தை ஆடையென தரிக்கிறார்கள், இந்த ஆடையை தரித்துக்கொண்டு தான் இன்று துறவிகள் பலபொல்லாத காரியங்கள் செய்து வருகிறார்கள்.
புலனடக்கமும் மன அடக்கமும் துறவிகளின் முக்கிய அறமாகும் இதை எளிதில் மறந்து விடும் இன்றைய துறவிகள் 'எங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் மற்றவர்கள் நுழைந்து பார்க்க அவசியம் இல்லை' என்கிறார்கள். செய்வதை செய்துவிட்டு இவர்கள் கொட்டும் சப்பைகட்டுகளுக்கு மனிதர்கள் பலரும் மண்டை அசைப்பது அதனினும் கொடுமை. உண்மை துறவிகள் தன்னலம் மறந்தவர்கள், அவர்களுக்கு அவர்களுடைய இச்சைகள் கண்முன்னே நிற்ப்பதில்லை, அவர்களின் உறக்கத்திலும் கூட உறுப்புகள் அவர்களை உறுத்தாது. ஆனால் இன்றைய நிகழ்வுகளை பார்க்கும் பொழுது தேனொழுக பேசும் துறவிகளை கண்டால் கால ஆண்டு தொலைவு ஓடும் அளவிற்கு பயமாக இருக்கிறது. உண்மையில் இவர்களின் துறவறத்தில் அடிப்படை தவறு இருக்கிறது. எந்த ஒரு விஷயம் ஒரு மனிதனுக்கு மறைத்து வைக்கப்படுகின்றதோ அதை ஆராய்ந்து பார்க்கும் 'EXPLORING MIND' மனிதனின் இயல்பான விஷயம். காமம் என்பது இந்த துறவிகளுக்கு திகட்டாத அளவிலும் தேடி சுவைக்கதூன்டாத அளவிலும் கற்றுகொடுக்க பட வேண்டும். சுவைகளை சுவைத்து பார்த்தால் தான் அதன் அம்சங்களை சொல்ல முடியும் அதனால் காமத்தின் அளவுகோலை இந்த துறவிகளுக்கு அளவாக அறிய செய்ய வேண்டும் பின் அதை தவிர்பதின் காரணத்தை அழுத்தமாக புரிய வைக்க வேண்டும். வேதங்களை மட்டும் படிக்கும் துறவிகள் வேதத்திலும் அதைவிளக்கும் வேதாந்தத்திலும் சிறந்து விளங்கியும் சுயக்கட்டுபாட்டை இழக்க நேருவதால் துரவுத்தன்மையை இழக்க நேரிடுகின்றது எனவே காமத்தின் மீது இருக்கும் தாகத்தை தீர்க்க இவர்களின் புலனடக்கத்தின் மேன்மையை கற்று கொடுக்க ஆதீனங்களும் துறவு மடங்களும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். யார் எந்த மொழி கூறினாலும் அதை அப்படிஏய் ஏற்றுக்கொள்ளாமல் நமது சுய அறிவிற்குள் கொஞ்சம் செலுத்தி ஆராய்ந்து எடுத்துக்கொள்ள சாமான்யர்கள் நாமும் கற்றுக்கொள்ள வேண்டும். துறவிகளை குற்றம் சொல்ல தேவை இல்லை காரணம் நம்மை பக்குவ படுத்திக்கொள தேவையான திறன்கள்அனைத்தும் தனி மனிதனிடமும் கொட்டிகிடக்கின்றது அதை தேடி பிடிப்போம் நமக்கு தேவையான அகசிந்தனைகளை நமக்குள் இருந்தே நாம் பெற்றெடுப்போம்
மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்களில் ஒருவன் அ. ஜோசப் கமிலஸ்.
No comments:
Post a Comment