மனிதன் என்கிற மிருகம் - பாகம் 1

முகவுரை

"அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்" - இன்றைய உலகம் சுவைத்து வரும் அபிரிமிதமான வளர்ச்சியும் கூட ஒரு விதத்தில் நஞ்சாகக்கூடிய அமிர்தம் தான்.




உலகம் தோன்றியது முதல் இந்த நிமிடம் வரை பல தாவர வகைகள் இருந்து மறைந்து போனது, பல மிருக வகைகள் இருந்த இடம் தெரியாமல் மாயமாகின இப்படி அழிந்து போன உயிரனங்கள் மனிதனைக் காட்டிலும் பலம் வாய்ந்தவை மனிதனைக் காட்டிலும் மிகபெரியவை ஆனால் அறிவு என்ற ஒரு புள்ளியில் மனிதன் இந்த மிருகங்களைக் காட்டிலும் உயர்நதவனாய் இருந்தான். அந்த அறிவு என்ற புள்ளி தான் இன்று வரை மனித இனம் அளியஹ்டு காது வந்திருக்கிறது. எந்த அறிவு மனிதனை இன்று வரை காத்து வந்ததோ அதே அறிவு இன்று மனிதனுக்கு ஆபத்தாக மாறிவருகிறது என்பதை உணர்த்துவது தான் இந்தக் கட்டுரையின் நோக்கம். இந்த "மனித என்கிற மிருகம்" கட்டுரையை ஒரே பதிவில் சுருக்கி விட முடியாததன் விளைவாக, சில பாகங்களாக இதை ஒரு தொடர் கட்டுரையாக எழுதுகிறேன்.

நெருப்பு, சக்கரம், உழவு, மொழி... இவற்றை மனிதன் கண்டுபிடிக்கும் முன் அவனும் ஒரு சாதாரண மிருகமாகத் தான் இருந்திருப்பான். உண்மையில் அந்த காலத்தில் மனிதனை மிருகங்கள் ஆண்டு கொண்டிருந்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு. விபத்தாக தான் கண்டு பிடித்த நெருப்பைக்கண்டு முதலில் மனிதனே அஞ்சி இருப்பான் பின் அவற்றைக் கொண்டு மிருகங்களிடம் இருந்து தன்னை காப்பற்றிக்கொண்டான், இருளில் வெளிச்சத்தை உண்டாக்கும் சூரியனாக நெருப்பை நினைத்தான், பிறகு மெல்ல மெல்ல நெருப்போடு நட்பாகி குளிர் காய்ந்தான், நெருப்பைக் கொண்டு மிருகச்சதை சமைக்க கற்றுக்கொண்டான். இப்படிதான் சக்கரத்தின் கண்டுபிடிப்பும் நிகழந்து மெல்ல மெல்ல அது தன் உருவம் பெற்றது, உழவும் மொழியும் இங்ஙனமே மனிதனுள் வளர பல கால ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.
இப்படி மெல்ல மெல்ல நிகழ்ந்த மனித அறிவின் வளரசியல் மனிதன் நாகரிக வாழ்க்கைக்குள் நுழைந்தான் உலகத்து உயிரினங்களில் உயர்ந்தவனாக மாறினான்.

உணவு, புணர்ச்சி இவற்றை தவிர வேறு எதற்கும் எந்த மிருகமும் ஆசை பட்டதில்லை...மனிதன் உலகத்தில் தோன்றிய பல லட்சம் ஆண்டுகள் கடந்து தன் அறிவை அவன் உணர துவங்கும் வரை மனிதனும் அப்படிதான் இருந்து வந்தான். என்று மனிதன் தன் அறிவின் உன்னதத்தை உணர்ந்து கொண்டானோ அன்று முதல் மனிதனுக்குள் நிகழ்ந்த மாற்றங்கள் மனிதனுக்கு பல விஷயங்கள் மீது பற்றுதலை அதிகப்படுத்தியது...கற்கள் கொண்டு தன் உறைவிடம் செய்ய ஆரம்பித்தான், பணம் கண்டு பிடித்து வணிகம் செய்ய கற்றுக்கொண்டான் கடலில் கப்பல் செலுத்தி கரைகளை கடக்கலானான். படி படியாக வளர்ந்த மனிதன் அது வரை நிகழ்ந்த மிக அளவான வளர்ச்சியால் மிருகத்தில் இருந்து தன்னை வேறு படுத்தி மனிதன் என்ற உருவம் அடைந்தான். அறிவின் வளர்ச்சி மனிதனின் ஆசையை மேலும் வளர்த்தது அறிவியல் செய்தான், மனிதனின் அறிவு மேலும் வளர்ந்தது அணுக்களை படித்தான், மனிதனின் அறிவுக் கண் மேலும் திறந்தது வின்வேளிகளையும் தொகுத்தான்...இப்படி இந்த மாற்றங்கள் நிகழ பல ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. மேற்கூறிய ஆசை மனிதனை மிருகங்களிடம் இருந்து பிரித்து தனிப்பட்டவனாக மாற்றியது மனிதன் என்கிற மிருகம் முழு மனிதன் ஆனான். ஆம் மனிதனை மனிதங்க மாற்றியது மனிதனின் ஆசை தான்.

இந்த ஆசை என்கிற உணர்வு அதிகமாக மாறியதன் விளைவு மீண்டும் மனிதன் மிருகமாக மாறினான்,....
"animal to man & man to animal again" இதை தான் இந்த கட்டுரையின் தொடர்ந்து வரும் பதிவுகளில் பார்க்கப்போகிறோம்

இந்த கட்டுரையின் தொடர்ச்சியில் மீண்டும் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது - உங்களில் ஒருவன் - அ. ஜோசப் கேமிலஸ்

2 comments:

  1. arumaiyana aarambam adutha paagathai ethirparkiraen....
    ungalathu kavithaikalum arumaiii!!!!

    ReplyDelete