மாயலோகம்!!!

செத்தபின்னும் சிரிக்கிறேன்
பிறந்த பொருள் புரியாமல்
வாழும்போது வியக்கிறேன்
யாவும்  கானல் என்றறியாமல்

இருப்பவை இறந்தபின் இருந்தவையாதலும்
மடிந்த பின் மனிதன் பினமென்றாதலும் 
இயற்கையின் நியதியில் உலகியல்
பாடங்கள்

வாழ்கையின் வரையறை வகுத்தவன் எவனும்
இளமையில் வகுத்தாய் கண்டதில்லை எவனும்
புத்தனாய் மாறுதல் எளிதினும் எளிதே
முதுமையில் மடியும் முன் எவனும் இங்கே புத்தனே

தேடல் - பாகம் ஒன்று - அவளது குரல் (கொஞ்சம் பெரிய சிறுகதை)

அவனுக்கென்று பெயர் ஒன்றும் இல்லை அவனை அவன் என்றே அழைக்கலாம் கரணம் அவன் நம்மை போல சாதாரணன் தான். முப்பது வயதை தொட்டு விடும் பருவம், ஒல்லியுமற்ற பருமனுமற்ற தேகம், ஒடிந்து போன கண்கள், முழுதும் மழிக்கப் படாத மீசையும்  தாடியும் அவனை ஒரு சாதாரண மனிதனாகவே காட்டியது. திருவல்லிகேணியில் புத்துபோல பெருகி இருக்கும் மேன்ஷன்களில் அணைத்து மேன்ஷன்களிலும் இவனை போல பலர் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவன் தான் இவன். காலை எழுந்து இரவு உறங்கும் வரை தனிமையின் வெறுமை கழிய புகைத்துக்கொண்டே இருப்பான், இதனால் அவனது அரை எங்கும் புகை வெள்ளோட்டம் போட்ட படியே இருக்கும் இவனது சட்டை முதல் அந்த அறையின் அணைத்து பொருள்களிலும் சிகரட்டின் மனம் படிந்தே இருந்தது. புகை பிடிக்கும் வேளைகளில் அவனுக்கு ஒரு வினோத பழக்கம் இருந்தது, அது அவன் சிகரெட்டை பற்ற வைத்த பின்பும் சிகரெட் லைட்டரை எரிய விட்டு அணைத்து  மீண்டும் எரிய விட்டு அதில் வரும் நெருப்பை உற்று நோக்கிய படி இருப்பான்.  ஒவ்வொரு முறை நெருப்பு எரிய துவங்கும்பொழுதும் அவனுக்குள் ஏதோ வெளிச்சத்தை பிறப்பித்தது பின் அதை அணைத்து விடும் பொழுது அவனுக்கு ஏதோ ஒரு தேடலை முடித்த நிறைவு கிடைத்தது . மீண்டும் அதை பற்ற வைக்கும் பொழுது அவனுக்கு நெருப்பு ஒரு வினோத பொருளாக தெரிந்தது, ஒவொரு முறையும் நெருப்பு ஏதோ புது உருவம் எடுத்து நடனம் ஆடுவது போல் அவன் உள்மனது உணர்ந்தது. கண்களை சிமிட்டி, புருவத்தை உயர்த்தி, நெற்றியை சுருக்கி அவன் நெருப்பின் அழகியலை ரசித்து ரசித்து சிகரட்டை புகைப்பான். அவனது அதிக பட்ச நேரம் செலவிட படுவது இப்படி புகைப்பதில் தான், இன்னும் சொல்ல போனால் சிதறிக்கிடக்கும் சிகரெட் பெட்டிகளும் அதனுள் சுருண்டு கிடக்கும் சிகரெட் துண்டுகளும் தான் அவனது அறையை ஆக்ரமித்து இருந்தது அதை தவிர அந்த அறையின் மூலையில் ஆணியில் தொங்கும் அவனது அழுக்கு துணிகளும், அந்த அறையின் என்றுமே மூடப் படாத அளமரையினுள் இருக்கும் அவனது கை கடிகாரமும் சில பழைய வார இதழ்களும் தான் இருந்தது. இப்படி ஒரு சாதாரணனின் வாழ்க்கை முறையும் மிகச்சாதரனமாகவே  இருந்தது.

அவனது மேன்ஷனுக்கு கீழே இருக்கும் பெட்டிக் கடையில் சிகரெட் மற்றும் லைட்டர் வாங்குவதும், அவனது ஹீரோ ஹோண்டா வண்டியில்  அலுவலகம் செல்வதும், மீண்டும் அறைக்குள் அடங்குவதும் தான் அவனது வாழ்க்கை, கோயில்களுக்கு அவன் அதிகம் செல்வது இல்லை அனால் கடவுள் பக்தியற்றவன் இல்லை என்பதற்கு அடையாளமாக தினமும் அவன் செல்லும் வழியில் இருக்கும் சிறிய கோயில் பிள்ளையார் மடத்தை வணங்கி விட்டே செல்வது அவன் வழக்கம்.
பெரும்பாலும் அவன் பெண்களை கவனிப்பது இல்லை ஆனால் மாடர்ன் உடையில் அலையும் பெண்களை இச்சையோடே பார்த்தாலும்  ஏதோ புழுவை பார்ப்பது போல வெறுப்பாக பார்ப்பான் அதைத்தவிர அவன் பார்க்கும் மற்ற இரண்டு பெண்களில் ஒருத்தி அவன் சிகரெட் வாங்கும் பெட்டிக்கடியில் தினமும் காலை இவன் வாங்கும் அதே நேரத்தில் சிகரெட் வாங்கும் பெண்,  நல்ல குடும்பப் பாங்காக உடை உடுத்தி இருக்கும் அந்த பெண் சிகரெட் வாங்குவது அவனுக்கு வியப்பாக இருக்கும் அவளை வெறித்து பார்த்து விட்டு நகர்ந்து விடுவான் இன்னொரு பெண் இவன் தினமும் பார்க்கும் அந்த சிறிய பிள்ளையார் மடத்தின் முன் நின்று அழுது கொண்டே இருக்கும் பெண், அவளும் குடும்பப் பாங்காக இருக்கும் ஒரு ஏழை பெண் என்பது அவளது உடையிலும் அவளுது அழுது வடிந்த முகத்திலும் தெரியும், அவளையும் வெறித்து பார்த்து விட்டு ஏதும் சிந்தனை இன்றி பொய் விடுவது அவனது பழக்கம், இவர்களை தவிர இவன் தினமும் சந்திக்கும் இன்னொரு மனிதனும் இருந்தான் அவன் இவனது மேன்ஷனின் வாசலில் படுத்துக் கிடக்கும் ஒரு மனநலம் குன்றிய மனிதன், அந்த மனிதன் அவன் மீது ஆறு ஏழு சட்டையும், பத்து கால் உறையும் அணிந்துகொண்டு இருந்தான் அவனது பாதங்கள் கூட தெரியாத அளவிற்கு துணிக்குள் தன்னை புகுத்திக் கொண்டு இருப்பான்.

இவர்களை பார்த்தும் இவர்கள் எதோ வினோதமாணவர்கள் என்பதை உணர்ந்திருந்தும் அவன் அவர்களை அதிகம் சட்டை செய்து கொள்வதில்லை வெறும் ஒரு வெரிச்ச பார்வை வீசி செல்வதிலும் இவன் நம்மைப்போல சதரனனாகவே இருந்தான்.

அவனது அன்றாட நாட்கள் இப்படி நகர்ந்து
கொண்டிருந்த வேலை ஒரு நாள் அவனது வேலை பறிபோனது, அமெரிக்காவில் ஏதோ பொருளாதார கோளாறாம் அதன் காரணமாக அவரகளது அலுவகத்தில் அல்குரைப்பம் அமெர்கிய பொருளாதாரம் நமது திருவல்லிக்கேணி சாதாரணனின் வேலையையும் பறிக்க அவன் வெறுப்போடு அவனது அறைக்கு திரும்பினான், எதிர்பாராத ஏமாற்றம் அவனுக்கு ஏதோ எண்ணங்களை கொடுத்தது, எதை சிந்திப்பது எதை விடுப்பது என தெரியாமல் தலை சுற்ற துவங்கியது கையில் காசு தீரும் முன் இனொரு வேலை வேடும் என தொடர பயம் பற்றிக்கொண்டது அது முதல் அவன் வெளியில் செல்ல பயந்து அறைக்குலையே அடங்கிப் போனான், பல அலுவகங்களுக்கு வேளைக்கு மனு போட்டும் தற்போது நிலவும் சுழலால் இபோதைக்கு வேலை இல்லை என்கிற ஒரே பதிலை கேடு சலித்துப் போனான் இந்த மாற்றங்களுக்கு நடுவிலும் மாறாமல் இருந்த ஒரு நிகழ்வு அவனது புகதலும் அவன் காணும் அந்த அமூன்று நபர்களும் தான், இப்போதெல்லாம் அவர்களை கண்டு அவன் நகர்வதில்லை ஏதோ சிந்திபவனை போல அவர்களை பார்த்ததும் நின்றுவ்டுறான் ஆனால் உண்மையில் அவனது எண்ணங்கள் வெறுமையை இருக்கின்றன ஏதும் சிந்திக்க அவக்கு தோன்ற வில்லை, அவனை நெருங்கிக்கொண்டிருக்கும் அவனது வெறுமையை கண்டு அவன் மிகவும் பயந்து அறைக்குள் அடங்கின ஒரு நாள்  ஒரு சிகரெட்டை எடுத்து நெருப்பேற்றியவன் அவனது லைட்டரை எடுக்க மறந்து ஏதோ சிந்தனையில் மூழ்கிப் போனான் அவனது சிந்தனையில் அவன் தினமும் பார்க்கும் அந்த சிகரெட் வாங்கும் இளம் பெண் தோன்றி தான் சிகரெட் வந்குவதின் காரணத்தை இவனுக்கு கூறுவது போல இருந்தது அவளது குரல் மேலோங்கி ஒலித்தது  இந்த உலகத்தில் உள்ள எல்லா அண்களும் பெரும்பாலும் புகைக்கிறார்கள், ஆண்களே மதுக்கடைகளில் நிற்கிறார்கள், கூட்டமான பேருந்துகளில் பெண்கள் மீது உரசி இன்பம் கொள்கிறார்கள் அணைத்து ஆண்களும் பெண்களை அடக்க நினைக்கிறார்கள் ஆணாதிக்க உலகில் ஆண்கள் செய்யும் ஏதேனும்  ஒரு தனிச்செயலை நானும் செய்ய நினைதேன் அதான் சிகரெட்டை வாங்குகிறேன் அதில் எனக்கு ஒரு அறப்ப  சந்தோஷம் என்று கூறும் அவள் திடீரென்று அழ துவங்கினால் அழுதவள் கண்களை துடைத்து விட்டு ஒரு குரூர சிரிப்போடு நான் எந்த சிகரெட்டையும் புகைக்க வில்லை நான் வெறும் நுகர்ந்து பார்கிறேன் அதில் ஆண் வர்க்கம் பெண்கள் மீது ஊதிய புகையின் நாற்றத்தை உணர்கிறேன் நானும் அங்கள் மீது இந்த நாற்றத்தை ஓத நினைக்க வில்லை ஆனால் பெண்கள் மீது ஆண்களில் அடக்க சக்தியை நான் மறக்காமல் இருக்க இப்படி செய்கிறேன் செய்து கொண்டே இருபேன் ஆண்களை நன் வெறுக்கிறேன் அவரகளது பிடியில் என் பெண்களும் அழுவதை பார்த்து அழுகிறேன் ஆண்களை போல சிகரெட் வாங்குவதால் ஆண்களை அடக்கி விட்ட ஆனந்தத்தில் சிரிக்கிறேன் என மீதும் மீண்டுமாக சிரித்தாள் அவன் தன நினைவு தெளிந்தவனாக எழுந்த பொது சிகரெட் அவன் கையை சுட்டது கீழே விழுந்த சிகரெட் துண்டை பார்த்தவன் தனக்கு தானே பேசிக்கொள்ள துவங்கினான்.

இவன் சிந்தனை தொடரும்...(அடுத்த பதிவில்
தேடல் - பாகம் இரண்டு - வெறுமை)

முகவுரை

மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சிக்கொள்கிரேன்

 நாம் பிறக்கும் முன்னமே நமக்கான வாழ்கை வடிவமைக்க படுகின்றது, நமது சுற்றங்கள் இயங்கிக்கொன்றுக்கின்றது,  நமது தேடல்ல்கள் நாம் பிறக்கும் முன்னமே துவங்கி விடுகின்றது, நமது ஆன்மீகமும் நமது உலகுமும் நமக்கு முனமே உருவாக்க பட்டவை எனவே வாழ்க்கைக்கு ஆரம்பம் என்பது உலகின் ஆரம்பம் போல ஒரு காண கிடைக்காத தேடல் தான், அதே போல இறப்போடு எந்த மனிதனின் வழக்கையும் முடிந்து போவஹ்டு இல்லை கரணம் நமது வாழ்க்கையும் அது உருவாக்கும் அதிர்வும் உலகம் இருக்கும் வரை எங்கோ ஒரு புள்ளியில் இருந்து கொண்டே இருக்கின்றது எனவே
எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையும் பிறப்பில் ஆரம்பிப்பதில்லை அது இறப்பில் முடிவதில்லை. இந்த கருத்து என்னுள் ஆழமாக விதைத்து போனதால் நான் எழுதவிருக்கும் சிறுகதைகளுக்கும் முடிவு என்பது இருக்க போவது இல்லை அது தன போக்கில் ஒரு முற்று இன்றி இயங்கிக்கொண்டே இருக்க போகின்றது. ஆம் நண்பர்களே இனி எனது பதிவதில் நான் சிறுகதைகள் எழுதப் போகிறேன் இது எனது சிறுகதைகளின் முகவுரை.

வாழ்க்கையின் பதிவாக இருக்க வேண்டும் என்பதனால் சதரனின் வாழ்க்கையை என் எழுத்தில் கொண்டு வர முயற்சிக்க போகிறேன், என் சிறுகதைகளும் மனித வாழ்க்கையை போல சுபம் போட்டு முற்று பெறாமல் ஒரு சில கேள்விகளோடும் வெளிவிகலோடும் நிலலடிக்கொண்டு இயங்கும். கதைகளில் நீங்கள் வாழ்வீர்கள் என்பது எனது அளிக்க முடியாத கருத்து.

மனித வாழ்க்கை ஒரு வெற்றிடம் இத நிரப்பிக்கொள்ள நாம் உறவுகளை ஏற்படுத்திகொல்கிரூம் இந்த உறவுகள் எதை தருகின்றன? இந்த உறவுகள் அற்ற தனிமை எதை தருகின்றது?? இந்த சமூகம் நமக்கு என்ன சொல்கின்றது?? நாம் ஏன் இங்கே வாழ்கிறோம் என்ற தேடல்கள் நிறைந்த வாழ்க்கையாக நமது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு வெற்றிடங்களை நிரப்ப முயற்சிக்கின்றோம் இப்படித்தான் என் கதையின் கதப்பதிரங்களும் செயல்பட போகிறார்கள். உங்களோடு உறவாட போகும் என் கதப்பத்திரன்களுக்கு பெரும்பாலும் பெயர்கள்  வைக்க  போவது இல்லை காரணம் பெயர்கள் ரதனிமனிதனை சுட்டிக் காண்பிக்கவே உபயோகிக்க படுகின்றன இங்கே எனது கதைகளில் வருபவர்கள் தனி மனிதர்கள் இல்லை மாறாக நமது நிஜங்களின் நிழல்கள் எனவே இவர்கள் ஒரு ஒரு மனிதனின் உருவங்கள் உங்கள் பெயர்களை சேர்த்து படிதுக்கொளுங்கள்.

என் பதிவேடுகளின் பக்கங்கள் பெரும்பாலும் புரட்ட படுவது இல்லை என்றாவது ஒரு நாள் யாரேனும் புரடிப்பர்த்தால் நிச்சயம் உங்களை இந்த கதைகளில் கண்டுகொண்டால் நானும் இந்த பதிவேடும் என் கதைகளும் பயன் பெற்றதாக ஆகும்

நன்றி
உங்களில் ஒருவன்
அ. ஜோசப் கேமிலஸ்

மனிதன் என்கிற மிருகம் பாகம் 4 - மரத்துக்கு மரம்



மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சிகொள்கிறேன்

 "நேற்று நாம் ஆசை கொண்ட பொருள்  இன்று நமக்கு பிடிப்பதில்லை, இன்று நமக்கு பிடிக்கும் பொருளும் நாளை பிடித்து இருக்கும் என்ற உத்திரவாதம் இல்லை" இந்த அடிப்படைதான் மனித மனம்  மிருகத்தின் மனதோடு நெருங்கி இருக்கச் செய்கின்றது.

உணவு துவங்கி உறைவிடம் வரை நமது ஆசை என்றுமே அடங்கி இருப்பது இல்லை, நடைபாதையில் படுப்பவருக்கு கூரை வீட்டின் மீது ஆசை, கூரை வீடு கிடைத்த பின் அவருக்கு மச்சி வீடு மீது ஆசை, அதுவும் கிடைத்தபின் அவருக்கு தனி பங்களாவின் மீது ஆசை இந்த ஆசையின் விளைவு நல்ல உழைப்பாக இருக்கும் வரையில் அந்த ஆசை மனிதனின் கட்டுபாட்டுக்குள் இருக்கிறது அனால் அதே ஆசை மனிதனை தன கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து விட்டால் அது அவரை தடம் மாறச்செய்கிறது. மனிதனின் அன்றாடத் தேவைக்கான அளப்பெரும் ஆசை தவறு இல்லை, ஆனால் அந்த ஆசையை அடைவதற்கு செல்லும் பாதையே மனிதனை மனிதனாகவும் மிருகமாகவும் வேறுபடுத்துகின்றது. 


கணினிகாலத்து மனிதன் மிகவும் பன்படுத்தப்படவன் எனிற பிம்பத்தில் வாழ்கிறான் ஆனால் உண்மையில் இன்றைய மனிதன் போல அரைகுறை மனிதன் என்றுமே இருந்ததில்லை. ஒருகாலத்தில் ஒரு படைப்பு உருவாக பல ஆண்டுகள் அராய்ச்சி தேவை பட்டது, அந்த படிப்பு கடை நிலை உபயோகஸ்தனிடம் வந்து சேர இன்னும் பல ஆண்டுகள் தேவைப்பட்டது ஆனால் இன்றைய நிலைமை வேறு ஒரு படைப்பு உருவாக வெகு சில காலமே எடுக்கிறது அது நல்லதா தீயதா என அறியும் முன் அந்த படைப்பின் விநியோகம் துவங்க பட்டு கடை நிலை மனிதனிடமும் வந்து சேருகின்றது. சாதாரண மக்கள் அந்த படைப்பாய் பயன்படுத்தி குறைகளை தெரிந்ததும் அதன் மறு உருவம் உடனுக்குடன் வெளிவருகிறது அதுவும் உடனுக்குடன் மக்களை வந்து சேருகின்றது...நண்பர்களே இப்படி என்ஹா ஒரு படைப்பும் மக்களை உடனுக்குடன் சேருவது மிக்க நலமே ஆனால் அந்த படைப்பு சமூகத்தின் மீதும் தனி மனிதன் மீதும் செலுத்தும் ஆதிக்கம் பெருகிவிட்டது என்பதை நாம் இங்கே கவனிக்க மறந்து போகிறோம். நமக்காக படைக்க பட்ட இயந்திரங்களுக்குள் நாம் இன்று சிக்கிக்கொண்டோம் என்பது மிக முக்கியமான ஒரு விஷயம். எனக்கு டேஹ்றிந்த ஒரு நண்பர் மாதம் ஒரு கைப்பேசியை மாற்றுவார் "updating" என்ற ஆங்கில சொல் இதற்க்கு மிக இலகுவாக பயன்படுத்த படுகின்றது. ஆனால் உண்மையில் இந்த வேகம் சிறிது நிறுத்தப்பட வேண்டும் மனிதனின் வளர்ச்சி அவனை மேலே உயர்த்த வேண்டுமே தவிர உயர்த்தி பின் அதல பாதாளத்தில் தள்ளிவிடக் கூடாது. மரத்திற்கு மரம் நிமிடங்களில் தாவும் குரங்கல்ல நாம் நிதானித்து பின்விளைவுகளை யோசித்தும்,  நமக்கு பின்னும் இந்த உலகம் நீடூடி வள வேண்டும் என்கிற அதீத எண்ணம் கொண்டும், படைப்புக்கள் யாவும் பணமா செய்ய அல்ல மாறாக சமொகத்திக்கு உபயோகப்பட என்னும் எண்ணம் வளரவும் சிந்திப்போம்...மரம் விட்டு மரம் தாவும் முன் சிந்திப்போம் நிலையான மனம் கொள்ளுவூம் மனிதனாவோம்

மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்களிலொருவன் அ. ஜோசப் கேமிலஸ் 

இயற்க்கைக்கு எல்லைகள் இல்லை...

இந்தியக்காற்று இங்கிலாந்தில் வீச யாரை கேட்கிறது அனுமதி
கால்கள் கொண்டேன் எல்லைகளும் கொண்டேன்...
பசபிக் பெருங்கடலின் துளி இந்தியப்பெருங்கடலில் கலக்க  கேட்பதில்லை அனுமதி
அரறறிவு கொண்டேன் என் உரிமைகள் இழக்க...
தமிழ்ப் புறாவும்  மராத்திப் புறாவும்  பேசிக்கொள மொழிபெதம் இல்லை
கல்வியும் கொண்டேன் சுருங்கிய அறிவோடே...
அர்டிக்கின் டால்பின் அட்லாண்டிக்கில் ஆட பாஸ்போர்ட் தேவை இல்லை
மனிதனானே எல்லைக்குள் அடங்கிப் போனேன்...

இயற்க்கை என்றும பேதம் கொண்டதில்லை அவை எந்த எல்லைக்குள்ளும் அடங்கியது இல்லை, மனிதர்கள் நாமும் இயற்கையின் அங்கம் தான் அனால் சிந்தித்து பாருங்கள் நண்பர்களை மேற்கூறிய எந்த ஒரு கருத்திலாவது மனிதன் என்பவன் இயற்கையின் மற்ற அங்கங்களை  போல சுதந்திரத்தை அனுபவிக்காதவன். உண்மையில் மனிதனுக்கு இயற்கையை அடக்கி ஆளத்தான் ஆசையே தவிர இயற்கையை அனுபவித்து வாழ ஆசைப்படுபவன் இல்லை.


இயற்கையாய் வாழ எல்லைகளை தகர்ப்போம்...அன்பு கொள்வோம் அதுவே இயற்கையின் வலி...எல்லைகள் மறந்தால் தொல்லைகள் இல்லை...

மிச்சம்...

பசித்த பின் உண்பவனுக்கு  பஞ்சம் மட்டும் மிச்சம் - இங்கே
பணமிகு மனிதர்க்கு நோய் நொடியே மிச்சம்
உழுதவனுக்கு  ஏர் மிச்சம்
நெய்தவனுக்கோ தறி மிச்சம்
கொடுதவனுக்கோ  தேய்ந்த செருப்பு  மிச்சம்
வாங்கியவனுக்கு கடன்கார பட்டம் மிச்சம்
செத்தவனுக்கு உடல் மிச்சம்
நடப்பவனுக்கு நாளைய நாள் மிச்சம்
காத்திருத்தல் காதலனுக்கு மிச்சம்
காத்திருந்தால் காதல் என்றுமே மிச்சம்
கல்யாணம் ஏழை பெண்ணுக்கு மிச்சம்
குழந்தையோ மலடிக்கு மிச்சம்
முதுமையில் தனிமை மிச்சம்
இளமையில் கல்வியே மிச்சம்
முத்தங்கள் காதலின் மிச்சம்
சப்தங்கள் மௌனத்தின் மிச்சம்
உலகமே கதிரவன் மிச்சம்
படைத்தவன் தூவிய எச்சம்

மனிதன் என்கிற மிருகம் - பாகம் 3 - வால்


மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சிக்கொள்கிரேன்!!!

மனிதன் என்கிற மிருகத்தை தவிர மற்ற எல்லா மிருகங்களுக்கும் பெரும்பாலும் வால் இருக்கிறது. நன்றியை தெரிவிக்க நாய் தன் வாலை ஆட்டுவதும், ஈக்களை விரட்ட மாடுகள் தன் வாலை அசைப்பதும் தவிர வாலுகென்று ஒரு முக்கிய பனி எதுவும் இல்லை, பின் எதற்காக இந்த உபயோகமட்ட்ற ஒரு உறுப்பை இந்த மிருகங்கள் தாங்கி இருக்கின்றன என்ன யோசிக்கவெய்த்து என்னை பல நேரங்களில் வால் தொந்தரவு செய்திருக்கின்றது. பல வேளைகளில் நாய்கள் தன் வலை அசைத்து என்னை பரிகசிப்பது போல தோன்றுவதும் உண்டு.

உங்களில் பலர் என்னை போலவே பல வேளைகளில் வில் போல வளைந்த நாயின் வாலை நேர் செய்ய முயற்சித்து இருப்பீர்கள் இன்னும் பலர்
மலை அளவு முயன்றும் நிமிர்த்த முடியாது அந்த நாய் வாலை கையால் நசுக்கி நாய் கடி வங்கி இருப்பீர்கள் அந்த அளவுக்கு இந்த நாயின் வால் நம்மை பல வேளைகளில் பாதித்து இருக்கிறது. ஒரு வகை உயர் ஜாதி (மனிதன் வகை படுத்தியதால் நாய்களிலும் கூட ஜாதிகள் பிரித்து விட்டோம்) நாய்களுக்கு வால் வெட்டபட்டால் தான் அதன் மதிப்பு கூடுமாம் என நான் கொடுத்த அறிவுரையை ஏற்று அந்த வகை நாய் ஒன்றை வால் வெட்டுவதற்காக என் நண்பர் தன் நாயை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். தன் வால் வெட்டுப்பட போவதை அறியாத அந்த பரிதாப ஜீவன் தன் வாலை அசைத்தபடியே மருத்துவமனைக்கு சென்றது. மருத்துவர் அந்த வாலை வெட்டி எடுத்த பிறகு நான்கு ஐந்து நாட்கள் அந்த நாய் வெறி பிடித்தது போல சுற்றி வந்தது, மேலும் அது தன் வால் தானாக மறைத்து கொள்கிறதோ என்று எண்ணி தன் பட்டத்தை திருப்பி திருப்பி பார்த்தது எனக்கு பரிதாபமாக தோன்றியது. சில களம் இப்படி தேடி பார்த்து கிடைக்காமல் போனதால் அது தன் வாலை மெல்ல மெல்ல மறந்து போனது, எப்பொழுதாவது பொழுதுய்கள் வால் அசைப்பதை கண்டுவிட்டால் அது வால் இல்லாத தான் பின்புறத்தை மட்டும் ஆடிக்கொள்வது உண்டு. இதை பார்த்த பொழுது அந்த நாயின் மீது எனக்கு ஒரு பரிதாப உணர்ச்சி தோன்றியது ஈதோ அந்த நாயின் இயல்புத்தன்மையை வெட்டி எடுத்துவிட்டது போன்ற குற்றுனர்சியும் எனக்கு உண்டானது. மறுமுறை இந்த உணர்வோடு அந்த நாயை பார்த்தபொழுது நாயின் புட்டத்தில் வெட்டி எறிந்த வால் ஆடுவதைப்போன்ற பிரமையும் தோன்றியது. பல வேளைகளில் மைதனுக்கும் ஒரு காலத்தில் வால் இருந்து அது ஏதோ ஒரு காரணத்தால் வெட்டப்பட்டு இருக்குமோ என கூட தோன்றியது உண்டு. நம் பின் புறத்தில் முதுகுத்தண்டின் இறுதியில் வால் வெட்ட பட்டது போன்ற ஒரு அமைப்பு இருப்பது போன்றும் எனக்கு தோன்றி இருக்கிறது இதன் காரணமாக நானும் கண்ணாடியில் வால் இருந்த தடம் தெரிகிறதா ன்ன பார்த்தது உண்டு.

இந்த வெட்ட பட்ட வாலை போலதான் நாம் பல வேளைகளில் நமக்கு தேவை அற்றது என எண்ணி நமது பல இயல்புகளை பல வேளைகளில் வெட்டி எரிந்து விடுகின்றோம். மற்றவர்கள் நம்மை தவறாக நினைப்பார்கள் என்றும், ஊருக்கு நல்லவன் நான் என்றும் சொல்லிக்கொள்ள பல வேளைகளில் நாம் நமது இயல்பை வெட்டி எரிந்து விடுகின்றோம் உண்மையில் நமது வால் நமக்கு பொருத்தமானதுதான். நமது வாலை நாம் காப்பாற்றிக்கொண்டால் நை வாலை பாத்து பொறாமைப்பட தேவை இல்லை.

மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்களில் ஒருவன் அ. ஜோசப் கேமிலஸ்