குறுங்கதைகள்


நண்பன்...
வேகமாக ஓடிச்சென்று கூடி இருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேசென்றேன், அங்கே அடிபட்டு இரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்த என் நண்பன்கையில் உயிரோடு ஓடிக்கொண்டிருந்த என் கை கடிகாரத்தை கண்டு நிம்மதிபெருமூச்சுவிட்டேன்....


சுப்பு தாத்தா...

வரப்பின் ஓரத்தில் நடந்துகொண்டிருந்த சுப்பு தாத்தாவின் வலது காலில் சேர் அப்பிக்கொண்டது, அந்த சேற்றை எடுக்க சுப்பு தாத்தா தன் இடது காலால் வலது காலை துடைத்தார், இப்பொழுது வலது காலின் சேர் இடது காலில் அப்பிக்கொண்டது, பின் இடது கால் சேற்றை அகற்ற வலது காலால் துடைத்தார் பின் இடத்தும் வலதுமாக தொடர்ந்தார்...


புல் மேயும் ஆடு...

இன்று அந்த ஆட்டிற்கு கிடைத்த புல்லின் ருசி போல என்றுமே கிடைத்ததில்லை, எனவே ருசியில் மயங்கி புல்லை மேய்ந்தது அந்த ஆடு, அருகில் நின்றுகொண்டிருந்த நரியை கவனியாமல்.

பள்ளிக்கு போகணும்..
.

பள்ளியின்
அருகே அறிவொளி இயக்கத்தின் விளம்பர பலகையை எழுதிக்கொண்டிருந்தான் அந்த ஆறுவயது சிறுவன்...


தமிழே உன்னை வணங்குகிறேன்...


என்குரலில் என் தமிழ் தாய்க்கு ஒரு வாழ்த்துப் பாடல்.....

நிரந்தரம்...

மனித வாழ்வில் அன்பு என்ற ஒரு உணர்வை தவிர்த்து நிரந்தரமானது எதுவும் இல்லை, என்பதை தான் இந்த பதிவில் என் குரலில் நான் பதிவு செய்கிறேன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

உன் வாழ்க்கை உன் கையில்...

'உன் வாழ்க்கை உன் கையில்' இதைத்தான் இந்த பதிவில் நான் பதிவு செய்கிறேன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
பட்டாம்ப்பூச்சியை போன்ற அழகான வாழ்க்கையை இறைவன் நம் கையில் கொடுத்துவிட்டான் அதை நாம் என்ன செய்ய போகின்றூம்???

பெண்மை...


தோழி ஒருவரோடு கதைத்த வேலை கிடைத்த ஒரு அழகான விஷயம்.. நண்பர்கள் கேட்டுகொண்டதால் இந்த அரட்டையை ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

women is made of man’s rib…not from his feet to be walked on.. not from his head to be superior over…. but from his side to be his equal… from under his arm to be protcted….And next to his heart to be always loved…. that’s the status of woman…. - being a man how do we justify this quote???

தாயாக, உடன்பிறப்பாக, தோழியாக, மனைவியாக, குழந்தையாக நம்மோடு நம்மை போல் வாழும் பெண்ணையும் சக உயிரினமாக மதிக்க கற்றுக்கொள்வோம். பெண்மையை போற்றுவோம், மனிதராய் வாழுவோம்.

முயற்ச்சிப்பேன்…

எழுபிறப்பும் மனிதனாக பிறக்க
வேண்டினேன் இறைவனிடம் ,
ஒன்றிலேனும் மனிதனாக,
மனிதத்தோடு…வாழ முயற்ச்சிப்பேன்…

கடவுளும் நம்பவில்லை...


மயில் மீது தம்பி
எலியோடு அண்ணன்
கருடணோடு கிருஷ்ணன்
எருதின் மேல் எமன்
என கடவுளர் வாகனங்கள்
அனைத்தும் மிருகங்களே….
மனித! நீ நம்பும் கடவுளும்
உனை நம்பவில்லை
எங்கேயும் கடத்தி விடுவாயோ - என்றெண்ணி
உன் மீது ஏறவில்லை

யார் மனிதன் (அன்றும் இன்றும்)….






கற்களை கூர்மையாக்கினான்,

அன்றைய மனிதன்மிருகங்களை கொள்வதற்கு.


பின் கத்தியை தீட்டினான்

அன்றைய மனிதன் மிருகத்தின் சதையை கிழிப்பதற்கு,


நெருப்பையும் கண்டுகொண்டான்

அன்றைய மனிதன்மிரகச்தை சமைப்பதற்க்கு,


அன்றைய மனிதன்அவன் பெயர் காட்டுமிராண்டி…


கற்களை தேடினோம்,

இன்றைய மனிதர்கள் நாம்

அடுத்தவன் மேல் எரிவதற்க்கு.


பின் கத்தியை தீட்டுகிறோம்

நாம் இன்றைய மனிதர்கள்

அடுத்தவன் உயிர் பறிப்பதற்கு


இன்றைய மனிதர்கள் நாம்,

நெருப்பையும் கையெடுத்தோம்,

பிறர் உடைமை எரிப்பதற்கு.


இன்றைய மனிதர்கள்நம் பெயர் நாகரிக மனிதர்கள்….


இது என்ன கொடுமை சார்????

மனுஷ இனம் மாறாது சாதி சண்டையும் தீராது….



புள்ள ஒன்னு பிறந்தாக்க- அதுக்கு

பேரு ஒன்னு வெச்சாக்க

அப்பன் பேர சேத்துவை- செத்த

சாதி பேர ஏன் சேத்த?

பள்ளிக்கூடம் போகும்போதும்

படிவம் வாங்கி எழுதும் போதும்

சாதி பேர கேட்டு

நீங்க சாதிசுட்டீங்களோ?

வேலை ஒன்னு போகும் போதும்

கல்யாணம் கட்டும் போதும்

சாதி பேர சொல்லிக்கிட்டு

சேந்ததேன்னவோ?

பிறக்கும் போதும் சாதி

படிச்ச போதும் சாதி

வாழ்ந்த போதும் சாதி
வாழ்க்கையோடு சேந்து போன

சாக்கடை சாதி எனக்கு செஞ்சது என்னவோ?

மேல் சாதி வீட்டு நாயும்

கீழ் சாதி மனுஷன பாத்தாகொலைக்க மாட்டேங்குது…

அவன தீண்ட கிட்ட நெருங்க மாட்டேங்குது…


மேல கீழ பிரிச்சு பாத்து

மனுஷ பய மயங்கி

நேத்துபோட்டுகிட்ட சண்டையிலே

சாதி ஜெய்ச்சுச்சு…

மனுஷன் மட்டும் செத்துட்டான்…

சாதி சண்ட போட்டுக்கிட்டு

செத்து போன பய புள்ளைய

பொதைக்க போன காட்டிலும்…..

(செத்த பின்னுமா சாதி?)

சின்ன சின்னதாய்…

முதுகெலும்பாகிப் போனதால்
முகம் மட்டும் பார்க்கும்
நம்மால் மறக்கப் பட்டவர்கள்
- விவசாயி

உள்நாட்டு சீமான்களின்
உல்லாச அந்தப்புரத்தில்
சுதந்திரச் சீதையின் சிறைவாசம்
- 15 August 1947

அன்பினறம்…


அழுக்காறு அண்டாது அகம் காத்து
நின்றலே அன்பினறம்
அஃது
மறவாது நின்றிட உணர்ந்துகொள்
மானிடர் யாவர்க்கும்
செங்குருதி ஒன்றே நிறம்….

ஒரு கடிதம்…


அன்புள்ள எனக்கு,

உன் நலம் விரும்பும் நான் எழுதும் மடல்….

நீயும் நானும் ஒருவர்த்தான்- என்பதால்

நலம் விசாரிக்க தேவையில்லை….

நான்தான் நீ- என்பதால்

நிகழ்வுகளை பட்டியளிட தேவையில்லை….

இருவரும் ஒருவர் தான் - என்பதால்

எண்ணங்களின் பகிர்விர்க்கும் அவசியமில்லை

வித்தியாசங்கள் இலாததால் - இறைவனிடம்

வேண்டிக்கொள்ளச்சொல்லவும் அவசியமில்லை

பின் எதற்கு இந்த கடிதம்???
உலகத்தின் ஓட்டத்தில் உன்னை நீ மறந்துவிட்டாய் என்ப்தை உணர்த்துவதர்க்குத்தான்.

இப்படிக்கு உன்னோடு,

நான் (எ) நீ.