
புள்ள ஒன்னு பிறந்தாக்க- அதுக்கு
பேரு ஒன்னு வெச்சாக்க
அப்பன் பேர சேத்துவை- செத்த
சாதி பேர ஏன் சேத்த?
பள்ளிக்கூடம் போகும்போதும்
படிவம் வாங்கி எழுதும் போதும்
சாதி பேர கேட்டு
நீங்க சாதிசுட்டீங்களோ?
வேலை ஒன்னு போகும் போதும்
கல்யாணம் கட்டும் போதும்
சாதி பேர சொல்லிக்கிட்டு
சேந்ததேன்னவோ?
பிறக்கும் போதும் சாதி
படிச்ச போதும் சாதி
வாழ்ந்த போதும் சாதி
வாழ்க்கையோடு சேந்து போன
சாக்கடை சாதி எனக்கு செஞ்சது என்னவோ?
மேல் சாதி வீட்டு நாயும்
கீழ் சாதி மனுஷன பாத்தாகொலைக்க மாட்டேங்குது…
அவன தீண்ட கிட்ட நெருங்க மாட்டேங்குது…
மேல கீழ பிரிச்சு பாத்து
மனுஷ பய மயங்கி
நேத்துபோட்டுகிட்ட சண்டையிலே
சாதி ஜெய்ச்சுச்சு…
மனுஷன் மட்டும் செத்துட்டான்…
சாதி சண்ட போட்டுக்கிட்டு
செத்து போன பய புள்ளைய
பொதைக்க போன காட்டிலும்…..
(செத்த பின்னுமா சாதி?)
No comments:
Post a Comment