
நண்பன்...
வேகமாக ஓடிச்சென்று கூடி இருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேசென்றேன், அங்கே அடிபட்டு இரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்த என் நண்பன்கையில் உயிரோடு ஓடிக்கொண்டிருந்த என் கை கடிகாரத்தை கண்டு நிம்மதிபெருமூச்சுவிட்டேன்....
சுப்பு தாத்தா...
வரப்பின் ஓரத்தில் நடந்துகொண்டிருந்த சுப்பு தாத்தாவின் வலது காலில் சேர் அப்பிக்கொண்டது, அந்த சேற்றை எடுக்க சுப்பு தாத்தா தன் இடது காலால் வலது காலை துடைத்தார், இப்பொழுது வலது காலின் சேர் இடது காலில் அப்பிக்கொண்டது, பின் இடது கால் சேற்றை அகற்ற வலது காலால் துடைத்தார் பின் இடத்தும் வலதுமாக தொடர்ந்தார்...
புல் மேயும் ஆடு...
இன்று அந்த ஆட்டிற்கு கிடைத்த புல்லின் ருசி போல என்றுமே கிடைத்ததில்லை, எனவே ருசியில் மயங்கி புல்லை மேய்ந்தது அந்த ஆடு, அருகில் நின்றுகொண்டிருந்த நரியை கவனியாமல்.
பள்ளிக்கு போகணும்...
பள்ளியின் அருகே அறிவொளி இயக்கத்தின் விளம்பர பலகையை எழுதிக்கொண்டிருந்தான் அந்த ஆறுவயது சிறுவன்...
hey jj....kalakal da mams..i am really happy abt u da...bec hehe i too become ungalli oruven.....yogi
ReplyDeletekeep posting more short stories love it n enjoyed it....especially....பள்ளிக்கு போகணும்...
ReplyDelete