மனிதனைத்தேடி (இரண்டாம் பதிவு) 'நான் என்ற உணர்வு ஒரு பாடம்'


பெரும்பாலான நேரங்களில் நாம் சுயநலவாதிகளாக இருப்பதற்கு கரணம் இந்த ' நான்' என்கிற உணர்வு, ஆனால் பல வேளைகளில் ஒரு மனிதனின் தன்னம்பிக்கையின் அளவுகோலாகவும் இந்த 'நான்' என்கிற உணர்வு செயல் படுகின்றது. கருத்து பரிமாற்றங்களின் பொது பலரும் தங்களது கருத்துக்களை முன்னிறுத்தி பேசுவதையும் அக்கருத்துக்களை மற்றவர்கள் மறுத்து பேசுவதையும் நாம் கவனித்திருக்கக்கூடும், இப்படி மனிதர்கள் தங்களது கருத்துக்களை வெளி படுத்தும் வேளையில் 'நான்' என்கிற உணர்வு அதிகம் வெளிப்படும் ஆனால் இந்த சூழ்நிலையில் வெளிப்படும் 'நான்' என்கிற உணர்வு ஆக்கப்பூர்வமானதாகவே இருக்கும், காரணம் இங்கே நிகழும் கர்ருத்துப்பரிமற்றத்தல் வரும் பயன் நன்மையாக இருக்கிறது, இன்றைய பல அறிவியல் மற்றும் ஆண்நிமிக கோட்பாடுகள் இப்படிப்பட்ட கருதுப்பரிமற்றன்களால் நிகழ்ந்ததவைகள் தான்.

ஒரு மரம் வளர நாம் அதன் வேறிற்கு நீர் இறைகின்றோம், ஆனால் அந்த நீரை வேறிடம் இருந்து மற்ற பாகங்கள் உள்வங்கிக்கொல்வதன் விளைவு தான் ஒரு மரத்தின் முழு வளர்ச்சி.அதாவது வேர் வழியே செல்லும் நீரை இலைகளும், கிளைகளும், மற்ற பிற பாகங்களும் தத்தம் தேவைக்கு ஏற்ப பிரித்து எடுத்து கொள்கின்றது, இந்த ஒரு நிகழ்வு, 'நான்' வாழ வேண்டும் என்ற அடிப்படையில் நிகழும் ஒரு நிகழ்வு இதன் காரணமாக முழு மரமும் செழிப்படைகின்றது. மேற்கூறிய மரத்தை போலவே இன்றைய சமுதையத்தின் வளர்ச்சியும் இருக்கின்றது, 'நான்' வளமுடன் வாழ வேண்டும் என நினைத்து ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்கிறான் இதன் விளைவு பல தனி மனிதர்களின் வளர்ச்சி ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியாக மாறுகின்றது. ஆனால் இந்த வளர்ச்சி பல நேரங்களில் ஆக்கப்பூர்வமாக இல்லாமல் போவதற்கு காரணம், சுயநலத்தின் அலுவுகோல் அதிகமாவது தான்.

'நான்' வாழவேண்டும் என ஒரு தனி மனிதன் நினைப்பது ஆக்கப்பூர்வமே, ஆனால் 'நான்' மட்டுமே வாழ வேண்டும் என்ற நினைப்போடு இருக்கும் பொழுது அது அழிவை ஏற்ப்படுத்துகின்றது. நம் வாழ்நாளில் தினமும் பல தடைகளை கடக்கிறோம், இந்த தடைகளை கடக்கும் வேளைகளில் நம் படிக்கற்கள் மற்ற மனிதர்க்கு தடைக்கல்லாய் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் வரையில், நமக்குள் வரும் 'நான்' என்கிற உணர்வு நமக்கும் இந்த சமுதையதிர்க்கும் நன்மையே பயக்கும்.

நாம் பல வேளைகளில் மற்ற மனிதர்கள் செய்யும் செயல்களால் அவர்களை நாம் மதிப்பீடு செய்வதுண்டு, அப்படி நம்மை நாம் எத்தனை முறை மதிப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்? உண்மையில் நம்மை நாம் மதிப்பீடு செய்ய அஞ்சுகிறோம், நான்' என்கிற எண்ணம் நம்மதுக்குள் கொஞ்சம் தூக்கலாகவே இருப்பதால் நாம் பல வேளைகளில் மற்றவர்களுக்கு தடையாய் இருக்கிறோம், இதன் காரணமாய் நம்மை நாம் மதிப்பீடு செய்ய மறுதலிக்கிறோம், நாம் செய்யும் தவறை நமக்கு நாமே சுட்டிக்காட்டிக்கொள்ள மறுக்கிறோம்.' நான்' என்கிற உணர்வு அதிகமாக உருவகம் எடுக்கும் பொழுது அது ஒரு போதையாகி போகின்றது நாமும் அந்த போதைக்கு அடிமையாகி விடுகின்றோம். நம்மை நாம் மதிப்பிட்டுக்கொள்ளும் வேலைய்களில் இந்த போதையின் அளவை நாம் குறைத்துக்கொள முடியும், நமக்குள் இருக்கும் 'நான்' என்கிற எண்ணமும் அளவைக்குள் அடங்கி ஆக்கப்பூர்வமானதாக இருக்கும்.

- என்றாவது ஒரு நாள் மற்ற மனிதனின் கண்ணீருக்கு நான் காரணமாக இருந்து இருகிறேனா?
- நான் முன்னேற ஏதேனும் மனிதனுக்கு தடையை ஏற்ப்படுத்தி இருகிறேனா?

இதுபோன்ற கேள்விகளை நமக்குள் நாம் நிதம் கேட்டு கொண்டு நம்மை நாம் மதிபிட்டுக்கொள்ளும் வேளைகளில் நமக்குள் இருக்கும் 'நான்' என்கிற உணர்வு கட்டுக்குள் இருக்கும், நமக்குள் வரும் 'நான்' என்கிற உணர்வும் மற்றவருக்கு பயனுள்ளதாய் இருக்கும்.

எனவே நம் தனிமை பொழுதுகளில் நம்மை நாம் மதிப்பிட்டுக்கொள்வோம், மற்ற மனிதருக்கு நாம் தடையாக இல்லாமல் பார்த்துக்கொள்வோம்.

1 comment:

  1. hey bro... tis stuff s really cool n make us 2 think ... i love it. keep going nice work .. :)
    ur lovingly
    rinkee

    ReplyDelete