மனிதனைத்தேடி (முதல் பதிவு) "நான் என்ற சொல்லின் பிறப்பு"


'நான்' - இந்த சொல் மனித வாழ்க்கையில் அழிக்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டது, இந்த 'நான்' என்ற சொல் எதை குறிக்கிறது என்ற தேடலில் உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை மனித இனம் குலம்பிக்கொண்டிருகிறது. மடிந்து போவதற்காக எந்த மனிதனும் பிறப்பதில்லை ஆனால் மரணம் வராத மனிதன் இது வரை உலகத்தில் பிறந்ததில்லை இனிமேலும் அப்படி ஒரு மனிதன் பிறக்க போவதில்லை, பின்எதற்க்காக இந்த மனித வாழ்க்கை? எதற்க்காக இந்த 'நான்' என்ற தேடல்கள்? எதற்க்காக உறவுகள்? இந்த கேள்விக்கான ஒரு சிறு அலசல் தான் இந்த கட்டுரையின் நோக்கம்.

உலகத்தில் உயிரினங்கள் வாழத்தொடங்கிய காலத்தில் நிச்சயம் மனிதனும் ஒரு மிருகமாகத் தான் இருந்திருப்பான், ஆனால் அவனது இந்த 'நான்' என்ற தேடல் அவனை மற்ற உயிரினங்களில் இருந்து மாறுபடுத்தி அவனை நாகரீகமாக்கியது. ஆம், ஒவ்வொரு மனிதனுக்குளும் இருக்கும் இந்த 'நான்' என்ற எண்ணம் தான் மனித இனத்தை பன்படுத்தியது. உறுப்புகளின் அமைப்புகளிலும், உடற்க்கூருகளின் அமைப்பாலும் மனிதர்கள் நாம் ஒரே போல இருக்கிறோம் அதாவது ஐம்புலன்களும், கைகால்களும், உடலுக்குள் இருக்கும் உறுப்புகளும் அனைத்து மாந்தருக்கும் ஒரே போல தான் இருக்கின்றது அனால் இந்த உடல் உருபுகளின் சிறு சிறு மாற்றங்கள், அளவைகளில் மாற்றங்கள் காரணமாக ஒரு ஒரு மனிதருக்குள்ளும் வேறுபட்டு இருக்கிறோம், குப்பன் சுப்பனை போல இருப்பதில்லை, கந்தன் வேலணை போல இருப்பதில்லை இந்த வேறுபாடு தான் 'நான்' என்ற சொல் பிறக்க முதல் கரணம். ஒரு ஒரு மிருகமும் பிரிக்க பட்டு இருப்பது அதன் உடற்க்கூருகளின் அடிப்படையில் தான் அதே போல மனித இனமும் தனக்குள் தானே பிரிந்து இருக்கிறது இந்த பிரிவு மனிதனின் ஆழ் மனதுக்குள் ஏற்படுத்தும் ஒரு உணர்வு தான் 'நான்' என்கிற உணர்வு.

பிறக்கும் பிள்ளையோடு ஒட்டிக்கொண்டு பிறக்கிறது இந்த 'நான்' என்கிற உணர்வு, வளரும் வேளையில் நான் மற்றவர்களை விட வலுவானவன் என்பதை உணர்த்த நிதமும் வெளிப்படுகின்றது இந்த 'நான்' என்கிற உணர்வு, வளந்து விட்ட வயதில் 'நான்' அனுபவத்தில் சிறந்தவன் என்று உணர்த்த வருகிறது இந்த 'நான்' என்கிற உணர்வு, மடியும் வேலையில் நான் வாழ்கையை முடித்து விட்டேன் இன் வரும் காலம் என்னை பேசட்டும் என வருகிறது 'நான்' என்கிற உணர்வு. இப்படி வாழ்க்கையோடு ஒட்டி போய்விட்ட இந்த 'நான்' என்கிற உணர்வை பற்றிய நீண்ட நெடும் அலசல்கள் தான் இனி வரும் பதிவுகளில் தொடர இருக்கின்றது. 'நான்' என்கிற உணர்வு எப்படி மனிதனுக்குள் பிறக்கின்றது என்பதை சற்றே உணர்ந்திருப்போம் இனி வரும் பதிவுகள் மூலம் 'நான்' என்கிற இந்த உணர்வு மனிதனுக்குள் நடத்தும் மாற்றங்களையும், போராட்டங்களையும் பற்றிபேசுவோம்.

No comments:

Post a Comment