உனக்காகவே நீ...




அவனும் இவனுமல்ல
உன் வாழ்வை செதுக்குதல் நீயே
அகமும் புறமுமென
உன் வலிகள் சும்மப்பது நீயே

உச்சாணிக்கொம்பில் நீ ஏறி நின்றால்
ஊரார் உன்னை சிரமேற்றிச் சுமப்பர்
தவறி நீ கீழே வீழ்ந்தால்
தவறு உணதென்பர்

சமுதாயம் சிரிக்குமே
உலகமுனை பழிக்குமே - என
எண்ணி வாடுதல் வீணே தோழா!!!

காலம் கரைந்துபோனால்
காற்றாய் மறைந்து போகும்
சுற்றம் முற்றமெல்லாம்
வெறும் கானல் நீரைப்போல

வா வாழ்ந்துவிடு உனக்காக
நீ நீயென்பது மட்டும் நிஜமாக....

கோவமேனும் பெருங்கடல்....


ஆழிசெய் யோசை தனையோப்ப
அகங்காரம் மனதுக்குள்
ஆரவாரம் செய்திடுமே ...

அனல் கக்கும் எரிமலையின் தனலோப்ப
விழி வழியே கோபத்தீ
வழிந்தோடிடுமே...

மடைமீண்ட அனைவெள்ளம் தனையோப்ப
கடும் சொற்கள்
இதழ் மடை கடந்திடுமே..

அமைதியெனும் ஆண்டவனை
மறந்திட்ட பொழுதுகளில்
முன் சொன்ன மூன்றுமே
ஒருசேர நிகழுமே

கோவத்தால் தொலைத்த ஞானத்தால்
கொட்டிய சொல் மீண்டும்
கை சேர்வதில்லை...
செய்திட்ட தீங்கும் எளிதில்
நீங்குவது இல்லை

அறிவே நல்லறிவே நீ அழிந்ததும் ஏனோ?
மதியே நுன்மதியே நீ மறைந்ததும் ஏனோ?

கோவமேனும் கடலுக்குள்
குதித்திட்ட மனிதன்
பிறனையும் கொன்றான்
தானும் மாண்டான்

தொலைந்து போ கோவமே
உன்மீது மனித இனமே கோவமாய் உள்ளது
மறைந்து போ கோவமே
உன்னாலே கலைந்திட்ட உறவுகளின் கூற்றிது

கோவமேனும் கடல் கடக்க - மானுடா
அமைதியெனும் படகை பிடி
அமைதியிலே நீ நிலைக்க - மானுடா
உன்னையே நீ படி....

உறவுகொள்!!!



உறவுகொள் உறவுகொள்
உலகோடு உறவுகொள்
உன்னதமாய் உறவுகொள்
உலகோடு உறவுகொள்

கடலோடும் அலையோடும்
காற்றோடும் மலரோடும்
உறவுகொள்
இன்பத்தை உணர்ந்துகொள்ள
இயற்கையோடு உறவுகொள்

ஒலியோடும் ஒளியோடும்
விசையோடும் வினையொடும்
உறவுகொள்
அறிவியலை அறிந்துகொள்ள
நின் அறிவோடு நீயே உறவுகொள்

நித்திரையின் சுகமறிய
உழைப்போடு உறவுகொள்
வறுமையின் சுமையரிய
பசியோடு உறவுகொள்

மானோடும் உறவுகொள்
மீனோடும் உறவுகொள்
குயில் குரலில் நீ பட
மயில் போல நடமாட
குயிலோடும் உறவுகொள்
மயிலோடும் உறவுகொள்

நூலோடு உறவுகொள்ள
நின் நுண்ணறிவை உணர்ந்துகொள்
வேலோடு உறவுகொள்
உன் வீரமதை தெரிந்துகொள்

நட்பின் நலமறிய
நெஞ்சோடு நட்புகொள்
நட்போடு உன் நண்பனோடு உறவுகொள்

உறவுகொள் உறவுகொள்
உலகோடு உறவுகொள்

“பூமி தொடும் முன்பே கொலை செய்யப்பட்டவன்”

மலராத மொட்டுக்கள் - இவை
மலரும் முன்னமே
கல்லறை அடைந்தவை...

இந்த பதிவும் அத்தகைய கல்லறையில் உறங்கும் மலராத மொட்டுக்களை பற்றித்தான்...