இயற்க்கைக்கு எல்லைகள் இல்லை...

இந்தியக்காற்று இங்கிலாந்தில் வீச யாரை கேட்கிறது அனுமதி
கால்கள் கொண்டேன் எல்லைகளும் கொண்டேன்...
பசபிக் பெருங்கடலின் துளி இந்தியப்பெருங்கடலில் கலக்க  கேட்பதில்லை அனுமதி
அரறறிவு கொண்டேன் என் உரிமைகள் இழக்க...
தமிழ்ப் புறாவும்  மராத்திப் புறாவும்  பேசிக்கொள மொழிபெதம் இல்லை
கல்வியும் கொண்டேன் சுருங்கிய அறிவோடே...
அர்டிக்கின் டால்பின் அட்லாண்டிக்கில் ஆட பாஸ்போர்ட் தேவை இல்லை
மனிதனானே எல்லைக்குள் அடங்கிப் போனேன்...

இயற்க்கை என்றும பேதம் கொண்டதில்லை அவை எந்த எல்லைக்குள்ளும் அடங்கியது இல்லை, மனிதர்கள் நாமும் இயற்கையின் அங்கம் தான் அனால் சிந்தித்து பாருங்கள் நண்பர்களை மேற்கூறிய எந்த ஒரு கருத்திலாவது மனிதன் என்பவன் இயற்கையின் மற்ற அங்கங்களை  போல சுதந்திரத்தை அனுபவிக்காதவன். உண்மையில் மனிதனுக்கு இயற்கையை அடக்கி ஆளத்தான் ஆசையே தவிர இயற்கையை அனுபவித்து வாழ ஆசைப்படுபவன் இல்லை.


இயற்கையாய் வாழ எல்லைகளை தகர்ப்போம்...அன்பு கொள்வோம் அதுவே இயற்கையின் வலி...எல்லைகள் மறந்தால் தொல்லைகள் இல்லை...

1 comment: