மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்வது உங்களில் ஒருவன் அ. ஜோசப் கேமிலஸ்

ஒரு ஒரு மனித மனமும் ஒரு பெரும் புதையல், இந்த புதையலை அகழ்வாராய்ந்து பார்க்க என்னோடு இந்த பயணத்தில் பயணிக்க உங்களை வரவேற்க்கிறேன், உங்களது மனதை நீங்களே அகழ்வாராய்ந்து உங்களது மனதின் புதையலை புரட்டிப்பார்க்க வாருங்கள் வாழ்க்கையில் பயணிப்போம். புதையல் என்பது பொதுவாக கண்களில் தென்படாது எங்கையோ மறைக்கப்பட்டிருக்கும் அதை போலத்தான் மனித மனமும் மறைக்கப்பட்டே இருக்கின்றது. பெருவாரியான நாட்களில் நாம் மற்ற மனிதர்களை மதிப்பீடு செய்யும் பொழுது நாம மறந்து விடும் ஒரு செயலைத்தான் இங்கு அலச இருக்கின்றோம்.
கண்முன்னே தெரியும் ஒரு பிம்பம் என்றும் கானல் என்பதை நாம் பல வேளைகளில் மறந்து விடுகின்றோம். காட்சிப் பிழைகளை கொண்டு மற்ற மனிதர்களை மதிப்பீடு செய்யும் பொழுது அது நம் மனதிற்கு தோன்றும் கானல் என்பதை மறந்து போகின்றோம். "தன் விழிகளை மூடிய பூனை உலகம் இருண்டது என்றதாம்" இதை போலத்தான் இன்று நாமும் இருக்கிறோம், அதாவது நம் பார்வைக்கு எது தெரிகின்றதோ அதை மட்டுமே அலசும் சதர்ணனாக நாம் செயல் படுகின்றோம். நம் முன்னே நிற்கும் ஒரு மனிதன் நமக்கு அவனது மனதின் முழுமையை காண்பிக்கும் முன்னமே அவனை மதிப்பீடு செய்ய நாம் முயல்கிறோம், இது முற்றும் தவறான ஒரு செயல். நமக்கு முன்னே நிற்கும் மைதான் பெரும் பாலும் அவனது நிஜத்தை மறைத்து நம்மை கவரும் செயலில் தான் முதன்மை செலுத்துகிறான் இதை மறந்து அவன் நல்லவன் எனும் முடிவுக்கு நாம் முந்துகிறோம்... பல வேளைகளில் தன சூல்நிளைகரனமாக சிலர் கோவம் கொள்ளும் வேலையில் அவனை தீயவன் என நாம் மதிபிடுகின்றோம் இதுவும் சேரி முன்னது போல நல்லவன் என மதிப்பிடுவதும் தவரே....
ஒரு மனிதன் தன முழுமையை காண்பிக்கும் முன்பு அவனை மதிப்பீடு செய்தல் என்பது பூனையின் செயலுக்கு ஒத்ததே...நமது செயல் நமக்கு என்றுமே தவறானதாக தோன்ற வேண்டும், அந்த தவறை அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் பின்னரே நாம் மற்றவரை மதிப்பீடு செய்தல் வேண்டும். "Judging a man is just judging what he has chosen to show you " மனிதர்களை மதிப்பீடு செய்ய அவசியம் இல்லாத உலகம் இது எனவே யாரையும் அறிந்து கொள்ள எத்தனிக்கும்முன் நம்மை நாம் அறிந்து கொண்டால் நிச்சயம் நாம் மற்றவரை மதிப்பீடு செய்ய முயற்சிக்க வேடியது இருக்காது.
மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்களில் ஒருவன் அ. ஜோசப் கேமிலஸ்
முகவுரை
"அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்" - இன்றைய உலகம் சுவைத்து வரும் அபிரிமிதமான வளர்ச்சியும் கூட ஒரு விதத்தில் நஞ்சாகக்கூடிய அமிர்தம் தான்.

உலகம் தோன்றியது முதல் இந்த நிமிடம் வரை பல தாவர வகைகள் இருந்து மறைந்து போனது, பல மிருக வகைகள் இருந்த இடம் தெரியாமல் மாயமாகின இப்படி அழிந்து போன உயிரனங்கள் மனிதனைக் காட்டிலும் பலம் வாய்ந்தவை மனிதனைக் காட்டிலும் மிகபெரியவை ஆனால் அறிவு என்ற ஒரு புள்ளியில் மனிதன் இந்த மிருகங்களைக் காட்டிலும் உயர்நதவனாய் இருந்தான். அந்த அறிவு என்ற புள்ளி தான் இன்று வரை மனித இனம் அளியஹ்டு காது வந்திருக்கிறது. எந்த அறிவு மனிதனை இன்று வரை காத்து வந்ததோ அதே அறிவு இன்று மனிதனுக்கு ஆபத்தாக மாறிவருகிறது என்பதை உணர்த்துவது தான் இந்தக் கட்டுரையின் நோக்கம். இந்த "மனித என்கிற மிருகம்" கட்டுரையை ஒரே பதிவில் சுருக்கி விட முடியாததன் விளைவாக, சில பாகங்களாக இதை ஒரு தொடர் கட்டுரையாக எழுதுகிறேன்.
நெருப்பு, சக்கரம், உழவு, மொழி... இவற்றை மனிதன் கண்டுபிடிக்கும் முன் அவனும் ஒரு சாதாரண மிருகமாகத் தான் இருந்திருப்பான். உண்மையில் அந்த காலத்தில் மனிதனை மிருகங்கள் ஆண்டு கொண்டிருந்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு. விபத்தாக தான் கண்டு பிடித்த நெருப்பைக்கண்டு முதலில் மனிதனே அஞ்சி இருப்பான் பின் அவற்றைக் கொண்டு மிருகங்களிடம் இருந்து தன்னை காப்பற்றிக்கொண்டான், இருளில் வெளிச்சத்தை உண்டாக்கும் சூரியனாக நெருப்பை நினைத்தான், பிறகு மெல்ல மெல்ல நெருப்போடு நட்பாகி குளிர் காய்ந்தான், நெருப்பைக் கொண்டு மிருகச்சதை சமைக்க கற்றுக்கொண்டான். இப்படிதான் சக்கரத்தின் கண்டுபிடிப்பும் நிகழந்து மெல்ல மெல்ல அது தன் உருவம் பெற்றது, உழவும் மொழியும் இங்ஙனமே மனிதனுள் வளர பல கால ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. இப்படி மெல்ல மெல்ல நிகழ்ந்த மனித அறிவின் வளரசியல் மனிதன் நாகரிக வாழ்க்கைக்குள் நுழைந்தான் உலகத்து உயிரினங்களில் உயர்ந்தவனாக மாறினான்.
உணவு, புணர்ச்சி இவற்றை தவிர வேறு எதற்கும் எந்த மிருகமும் ஆசை பட்டதில்லை...மனிதன் உலகத்தில் தோன்றிய பல லட்சம் ஆண்டுகள் கடந்து தன் அறிவை அவன் உணர துவங்கும் வரை மனிதனும் அப்படிதான் இருந்து வந்தான். என்று மனிதன் தன் அறிவின் உன்னதத்தை உணர்ந்து கொண்டானோ அன்று முதல் மனிதனுக்குள் நிகழ்ந்த மாற்றங்கள் மனிதனுக்கு பல விஷயங்கள் மீது பற்றுதலை அதிகப்படுத்தியது...கற்கள் கொண்டு தன் உறைவிடம் செய்ய ஆரம்பித்தான், பணம் கண்டு பிடித்து வணிகம் செய்ய கற்றுக்கொண்டான் கடலில் கப்பல் செலுத்தி கரைகளை கடக்கலானான். படி படியாக வளர்ந்த மனிதன் அது வரை நிகழ்ந்த மிக அளவான வளர்ச்சியால் மிருகத்தில் இருந்து தன்னை வேறு படுத்தி மனிதன் என்ற உருவம் அடைந்தான். அறிவின் வளர்ச்சி மனிதனின் ஆசையை மேலும் வளர்த்தது அறிவியல் செய்தான், மனிதனின் அறிவு மேலும் வளர்ந்தது அணுக்களை படித்தான், மனிதனின் அறிவுக் கண் மேலும் திறந்தது வின்வேளிகளையும் தொகுத்தான்...இப்படி இந்த மாற்றங்கள் நிகழ பல ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. மேற்கூறிய ஆசை மனிதனை மிருகங்களிடம் இருந்து பிரித்து தனிப்பட்டவனாக மாற்றியது மனிதன் என்கிற மிருகம் முழு மனிதன் ஆனான். ஆம் மனிதனை மனிதங்க மாற்றியது மனிதனின் ஆசை தான்.
இந்த ஆசை என்கிற உணர்வு அதிகமாக மாறியதன் விளைவு மீண்டும் மனிதன் மிருகமாக மாறினான்,....
"animal to man & man to animal again" இதை தான் இந்த கட்டுரையின் தொடர்ந்து வரும் பதிவுகளில் பார்க்கப்போகிறோம்
இந்த கட்டுரையின் தொடர்ச்சியில் மீண்டும் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது - உங்களில் ஒருவன் - அ. ஜோசப் கேமிலஸ்
இரவிலும்
காற்றில் நெருப்பின் நிறம்
பகலிலோ
மரங்களின் அசையா முகம்
வியர்வை துளியோடு
உயிரின்
சொட்டுக்கள் நிலம் முட்டும்
வெயிலின் தகிப்போடு
வெறுமை
தலை கொட்டும்
நீரின் நிறம்கூட ஆற்றில் இல்லை
நிலத்தின் நிழலிலும் ஈரம் இல்லை
கதிரவனின் கிரணங்கள் காற்றோடு கலக்கும்
இது கோடையின் காலம்
மனிதனை இயற்க்கை மறுதலித்த நேரம்