
மீண்டும் ஒரு பதிவோடு உங்களில் ஒருவனாக உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சிக்கொள்கிரேன்...
நேற்றும், இன்றும், என்றும் மனிதனின் ஆசை - நிம்மதியான ஒரு வாழ்க்கை
ஆனால் பெரும்பாலான நேரங்களில் நிம்மதி என்பது நமக்கு நரி தேடிய திரட்சைக்கனியாக எட்டாத உயரத்தில் இருக்கிறது, இதற்க்கு மிக முக்கிய காரணம் நம்மை நாம் இந்த உலகத்தில் தொலைத்துவிட்டது தான். எப்படி நமது வாழ்க்கையை நாம் தொலைத்தோம்? பின் வரும் கட்டுரையை படித்துப் பார்த்தல் உங்கள் வாழ்க்கையின் கடந்த காலமும் நிகழ் காலமும் உங்கள் கண்முன்னே நிழலாடும், அப்பொழுது வாழ்க்கையை நாம் தொலைத்துவிட்டு எப்படி வாழ்கிறோம் என்பதையும் அறிந்துகொள்வீர்கள்.
வாழ்க்கையை இப்படி வகுத்துக் கூறலாம்:-
நமது தேவை இன்னது என்பதை நாம் அறியாதவர்களாய் பல காலம்,
நமது தேவை இது என்று எண்ணி தவறான ஒரு தேடலில் இறங்கி பின் தெளிவுற்று பின்வாங்கி சில காலம்
நமது தேவை இன்னது என்று அறிந்திருந்தும், சூழ்நிலையின் காரணமாக நமது தேவையை மறந்து அல்லது மறுதலித்து சில காலம்,
நமது தேவை இன்னது என்று அறிய வரும் காலத்தில் நமது பருவங்கள் கடந்து விட்ட வருத்தத்தில் சில காலம்
நமது வாழ்க்கையின் கடந்த காலத்தை புரட்டிப் பார்க்கையில் இப்படித்தான் பல தோல்விகளும் வருத்தங்களும் நமக்கு மிஞ்சும்.... எட்டி இருக்கும் கணியை எட்டி பிடித்த வெற்றியாளர்கள் இந்த உலகத்தில் கொஞ்சமே, அவர்களை சந்தனையளர்கள் என்று உலகம் அழைக்கிறது, எஞ்சியவர்கள் சாமான்யன் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். இப்படி சாமான்யன் என்று சொல்லிக்கொள்ளும் மனிதர்களின் ஆழ் மனதில் ஆறாத ஒரு வேதனை என்றுமே நிலைத்திருக்கும், அது அவன் தேடிய அவனது தேவை அவனுக்கு கிடைகாது போன வருத்தம், இந்த வருத்தம் தான் ஒரு மனிதனை நிம்மதி எங்கே என தேடசெய்கிறது....
உங்களை நீங்களே ஒரு கேள்வி கேட்டு பாருங்கள் நண்பர்களே, இன்று உங்களிடம் இருக்கும் உறவுகள், உடமைகள் உங்களுக்கு நிம்மதியை தருகிறதா என்று, பலருக்கு இதன் பதில் இல்லை என்றே தோன்றும் காரணம் நீங்கள் உங்களுக்கு வாய்த்தவற்றைக் கொண்டு வாழ பழகிக்கொண்ட சாமான்யன்கள். உங்களின் தேவைகளையும், தேடல்களையும் உங்களின் சூழ்நிலையால் மறுதலிக்கக் கற்றுக்கொண்ட உலகவாசிகள். இப்படி வாழ்வோர் தண்ணீருக்குள் அழும் மீனை போன்றவர்கள், உங்களின் வேதனையை நீங்கள் புன்னகை என்ற வர்ணம் பூசி மறைத்துக்கொள்ள தெரிந்த மந்திரவாதிகள்.
நமக்கு பற்றற்ற ஒரு சூலில் நம்மை நாம் புகுத்திக்கொள்வதால் நமக்குக் கிடைப்பது நிம்மதியற்ற வாழ்க்கை மட்டுமே. அலைகளை மோதிக் கிழிக்கும் கப்பல் மட்டுமே கரை சேரக்கூடும், நிலத்தை முட்டி முளைக்கும் விதைகள் மட்டுமே மரமாகக் கூடும்.
நண்பர்களே வெற்றியாளர்களை யாரும் பிறப்பால் செய்துவிடுவதில்லை, ஒவ்வொரு வெற்றியாளனும் தன்னுடைய தேடலை அறிந்தவனாய் இருக்கிறான் அந்த தேடலில் தன்னை முழுமையாக செளுத்திக்கொள்கிறான். நாமும் வெற்றிபெற நிமதியை நம் மனதிர்க்குதர நான் செய்யவேண்டியது இதுதான். நமது வாழ்க்கையின் பற்று இன்னது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் அதை அறிந்து கொண்ட மறுகணமே அந்த பற்றுக்கான தேடலில் நம்மை நாம் செலுத்த வேண்டும். ஒரு நேர்த்தியான மாலுமி கப்பலை செளுதுவதைபோல நாமும் நமது வாழ்க்கையை நமக்கு பற்றுமிக்க செயலில் செலுத்தினால் நிம்மதியும் வெற்றியும் என்றுமே எந்த மண்டிதனுக்குமே எட்டாத கணியல்ல.
வாருங்கள் தோழர்களே நிம்மதி என்பது உலகெங்கும் உங்களுக்காகக கொட்டிக்கிடகின்றது ஆனால் உங்கள் விழிகளில் தான் ஏதோ ஒரு திரை விழுந்து நிம்மதியை மறைக்கின்றது. உங்களின் விழித்திரையை விசலமாக்குங்கள், அகச்சிரையை உடைத்தெறியுங்கள் நிம்மதியை சுவைத்து மகிழுங்கள்.
நிம்மதியாய் வாழ்ந்திட உனது தேவையை முதலில் அறிந்துகொள் பின் உனது தேவையை அடைய உன்னை நீ தயார் செய்துகொள் பிறகு வாழ்க்கை களத்தில் நம்பிக்கையோடு போராடு நிச்சயம் வெற்றியும் நிம்மதியும் உனக்கு என்றுமே உடனிருக்கும்...
மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திக்கும்வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்களில் ஒருவன் அ. ஜோசப் கேமிலஸ்....நன்றிகள்
kalakre po.
ReplyDelete