
என் உயிருக்கு உரியவள் நீயம்மா
என் உயிரும் கூட நீயே அம்மா
ஈரைந்து மாதங்கள் உனக்குள் வைத்தாய் - எனை
ஈன்ற பின்பும் உன் கண்ணுக்குள் வைத்தாய்
எனக்காக நீ துஞ்சாத இரவுகள் கொண்டு
ஒரு நூற்றாண்டு செய்திடுவான் கடவுள் இன்று.
மழலை மொழி மறந்து நான் செப்பிய முதல் சொல் நீ
அழுகை சுமை மறக்க என்றும் நான் சொல்லும் சொல் நீ
உலகின் அழகிகள் உன் போல் இல்லை - என் தாயே
நீயன்றி எனக்கு இவுலகமே இல்லை
என் பிஞ்சு பாதங்கள் உனை மிதித்த வேளையிலும்
என் நஞ்சு மொழிகள உன்னை சுட்ட பொழுதிலும்
எனக்காக எனைக்காக்க எல்லாம் செய்தவள் நீயம்மா
மழலை காலத்தில் உன் தோளில் சாய்ந்தேன்
நான் மடியும் வேலையும் அதைத்தர இறைவனிடம் கேட்பேன்
எதை நான் செய்தேன் உனை தாயாக பெறுவதற்கு
எதை நான் செய்வேன் மறுபிறப்பில் உன் மகனாக பிறப்பதற்கு...