மனிதன் என்கிற மிருகம் பாகம் 4 - மரத்துக்கு மரம்



மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சிகொள்கிறேன்

 "நேற்று நாம் ஆசை கொண்ட பொருள்  இன்று நமக்கு பிடிப்பதில்லை, இன்று நமக்கு பிடிக்கும் பொருளும் நாளை பிடித்து இருக்கும் என்ற உத்திரவாதம் இல்லை" இந்த அடிப்படைதான் மனித மனம்  மிருகத்தின் மனதோடு நெருங்கி இருக்கச் செய்கின்றது.

உணவு துவங்கி உறைவிடம் வரை நமது ஆசை என்றுமே அடங்கி இருப்பது இல்லை, நடைபாதையில் படுப்பவருக்கு கூரை வீட்டின் மீது ஆசை, கூரை வீடு கிடைத்த பின் அவருக்கு மச்சி வீடு மீது ஆசை, அதுவும் கிடைத்தபின் அவருக்கு தனி பங்களாவின் மீது ஆசை இந்த ஆசையின் விளைவு நல்ல உழைப்பாக இருக்கும் வரையில் அந்த ஆசை மனிதனின் கட்டுபாட்டுக்குள் இருக்கிறது அனால் அதே ஆசை மனிதனை தன கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து விட்டால் அது அவரை தடம் மாறச்செய்கிறது. மனிதனின் அன்றாடத் தேவைக்கான அளப்பெரும் ஆசை தவறு இல்லை, ஆனால் அந்த ஆசையை அடைவதற்கு செல்லும் பாதையே மனிதனை மனிதனாகவும் மிருகமாகவும் வேறுபடுத்துகின்றது. 


கணினிகாலத்து மனிதன் மிகவும் பன்படுத்தப்படவன் எனிற பிம்பத்தில் வாழ்கிறான் ஆனால் உண்மையில் இன்றைய மனிதன் போல அரைகுறை மனிதன் என்றுமே இருந்ததில்லை. ஒருகாலத்தில் ஒரு படைப்பு உருவாக பல ஆண்டுகள் அராய்ச்சி தேவை பட்டது, அந்த படிப்பு கடை நிலை உபயோகஸ்தனிடம் வந்து சேர இன்னும் பல ஆண்டுகள் தேவைப்பட்டது ஆனால் இன்றைய நிலைமை வேறு ஒரு படைப்பு உருவாக வெகு சில காலமே எடுக்கிறது அது நல்லதா தீயதா என அறியும் முன் அந்த படைப்பின் விநியோகம் துவங்க பட்டு கடை நிலை மனிதனிடமும் வந்து சேருகின்றது. சாதாரண மக்கள் அந்த படைப்பாய் பயன்படுத்தி குறைகளை தெரிந்ததும் அதன் மறு உருவம் உடனுக்குடன் வெளிவருகிறது அதுவும் உடனுக்குடன் மக்களை வந்து சேருகின்றது...நண்பர்களே இப்படி என்ஹா ஒரு படைப்பும் மக்களை உடனுக்குடன் சேருவது மிக்க நலமே ஆனால் அந்த படைப்பு சமூகத்தின் மீதும் தனி மனிதன் மீதும் செலுத்தும் ஆதிக்கம் பெருகிவிட்டது என்பதை நாம் இங்கே கவனிக்க மறந்து போகிறோம். நமக்காக படைக்க பட்ட இயந்திரங்களுக்குள் நாம் இன்று சிக்கிக்கொண்டோம் என்பது மிக முக்கியமான ஒரு விஷயம். எனக்கு டேஹ்றிந்த ஒரு நண்பர் மாதம் ஒரு கைப்பேசியை மாற்றுவார் "updating" என்ற ஆங்கில சொல் இதற்க்கு மிக இலகுவாக பயன்படுத்த படுகின்றது. ஆனால் உண்மையில் இந்த வேகம் சிறிது நிறுத்தப்பட வேண்டும் மனிதனின் வளர்ச்சி அவனை மேலே உயர்த்த வேண்டுமே தவிர உயர்த்தி பின் அதல பாதாளத்தில் தள்ளிவிடக் கூடாது. மரத்திற்கு மரம் நிமிடங்களில் தாவும் குரங்கல்ல நாம் நிதானித்து பின்விளைவுகளை யோசித்தும்,  நமக்கு பின்னும் இந்த உலகம் நீடூடி வள வேண்டும் என்கிற அதீத எண்ணம் கொண்டும், படைப்புக்கள் யாவும் பணமா செய்ய அல்ல மாறாக சமொகத்திக்கு உபயோகப்பட என்னும் எண்ணம் வளரவும் சிந்திப்போம்...மரம் விட்டு மரம் தாவும் முன் சிந்திப்போம் நிலையான மனம் கொள்ளுவூம் மனிதனாவோம்

மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்களிலொருவன் அ. ஜோசப் கேமிலஸ்