இரவிலும்
காற்றில் நெருப்பின் நிறம்
பகலிலோ
மரங்களின் அசையா முகம்
வியர்வை துளியோடு
உயிரின்
சொட்டுக்கள் நிலம் முட்டும்
வெயிலின் தகிப்போடு
வெறுமை
தலை கொட்டும்
நீரின் நிறம்கூட ஆற்றில் இல்லை
நிலத்தின் நிழலிலும் ஈரம் இல்லை
கதிரவனின் கிரணங்கள் காற்றோடு கலக்கும்
இது கோடையின் காலம்
மனிதனை இயற்க்கை மறுதலித்த நேரம்