
இன்றோடு முடிவதில்லை இரவோடு மடிவதில்லை
வானம் நாம் பார்க்கும் வரை வாழ்க்கை அது ஓய்வதில்லை
இறப்பதற்கே யாரும் பிறப்பது இல்லை - ஆனால்
முற்றுபெறாத துவக்கங்கள் என்றும் அர்த்தங்கள் செய்வதில்லை
பிறப்பை போல் புதிரும் இல்லை,
இறப்பை போல் இருளும் இல்லை.
உயிரின் பொருள் உணர்ந்துவிட்டால்,
உயிர் வாழ்தலில் பொருளும் இல்லை.
கல்லறைகள் கற்பிக்கும்
படிப்பினை படித்தவன்
இழப்பையும் இழக்கிறான்
இருக்கையில் சிரிக்கிறான்
உல்லாசம் சில காலம்
உயிர் கரைந்து பல நேரம் - இன்
நியதியை உணர்ந்தவன்
நிம்மதியை ருசிக்கிறான்
மண்ணோடு விழுகையில்
நிழல்கூட நமதில்லை - நம்
உடல்கூட நிலையில்லை
நமக்காக நாம் வாழுகையிலும்
நான் என்ற சொல்லுக்கு
அர்த்தம் மட்டும் என்றுமே புரிவதில்லை